அவர் உங்களை விசாரிக்கிறவர் HE CARETH FOR YOU பினிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா 60-03-01 1. நாம் வார்த்தையின் ஆக்கியோனிடம் பேசுகையில் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்களுடைய பரலோகப் பிதாவே, இந்த மாலை வேளையில் மீண்டும் உம்மிடம் வரும்படிக்கு கிடைத்த இந்த மேலான மற்றும் சிறப்பு வாய்ந்த சிலாக்கியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டிக் கொள்ளும் படிக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் தாழ்மையுடன் வருகிறோம். இன்றிரவு மீண்டும் நீர் எங்களை சந்தித்து நாங்கள் செய்வதற்கும் அல்லது நினைப்பதற்கும் மேலாக மிகவும் அதிகமாகவும் அபரிமிதமாகவும் எங்களுக்கு அருளுவீர். 2. தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் - முதலாவது உம்மை அறியாமல் பாவத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், இன்றிரவு அவர்களுடைய ஆத்துமாவும் ஆவியும் குணமடைந்து, இன்றிரவு முற்றிலுமாக உம்மை சேவிக்கிறவர்களாக ஆக வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, எந்த வழியில் திரும்புவது என்று அறியாமல் இருக்கிறவர்களுக்காக ஜெபிக்கிறோம், நாங்கள் அதை அழைக்கிறபடி, வேலியண்டை இருக்கிறவர்கள், ஒரு வேளை இது அவர்களுடைய கடைசி தருணமாக இருக்கலாம், பிதாவே, அவர்கள் தங்களுடைய கண்களை பரலோகத்தை நோக்கித் திருப்ப வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, அதை அருளும். 3. இதை மிகவும் நேசித்த போதிலும், இந்த ஆராதனையில் கலந்து கொள்ள முடியாமல், மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வியாதியஸ்தராயிருந்து, உடல் நலம் தேறி வருகிறவர்களையும் நாங்கள் மறக்க மாட்டோம். இன்றிரவு தேவனுடைய தூதர்கள் அவர்களுடைய படுக்கையருகில் செல்ல வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம். நாங்கள் ஒன்றாக கூடி ஜெபிக்கிற காரணத்தால், சுகமளிக்கும் வல்லமை அவர்களிடம் வந்து, அவர்கள் நாளை இரவும் அதனைத் தொடர்ந்தும் ஆராதனைக்கு வருவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. 4. வியாதியிலும் உபத்திரவத்திலும் இங்கிருக்கும் சிலருக்கு இந்த இரவானது அவர்களுடைய விடுதலையின் இரவாக இருப்பதாக. நாங்கள் இனி மேலும் உமக்காக காத்திருக்கும் வேளையில் எங்களை ஒன்றாக ஆசீர்வதியும், அவர் நிமித்தமாக இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்.) 5. சரி, இன்றிரவு கர்த்தருடைய வீட்டிற்கு திரும்பவும் வருவது மிகவும் நன்றாக உள்ளது. நான் வெளியே கதவண்டையில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு-ஒரு நபரைச் சந்தித்தேன். நான் இவ்விதமாக அங்கு சென்று அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தேன். அது சகோ.ஜான் ஷாரிட்ஸினுடைய பையன். அவன் எப்படி அவ்வளவு பெரியவனாக வளர்ந்தான் என்று தெரியவில்லை. தாவீது அவனைப் போல பெரியவனாக இருந்தானா என்று அவனிடம் கேட்டேன். நல்லது, நான் ஒரு வருடத்திற்கு முன்பு தான் இங்கிருந்தேன் என்பது போல் தோன்றுகிறது. அது சுமார் மூன்று வருடங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால் அவன் வெறுமனே ஒரு ஜோடி சிறு மேலாடைகளுடன் சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த ஒரு சிறு பையனாக இருந்தான். இன்றிரவோ அவன் ஒரு பலமான, உயரமானவனாக இங்கே இருக்கிறான் (நல்லது, அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று நான் நினைக்கவில்லை.), அவன் அழகான வாலிபனாக இருக்கிறான் என்று கூறுவேன். ஆனால் அவன் நிச்சயமாக வளர்ந்து இருக்கிறான். அந்த விதமாகத்தான் ஒவ்வொன்றும் போகிறது. நாம் அப்படியே வளர்ந்து கொண்டே இருக்கிறோம். 6. நான் இன்று வெளியில் கேமல்பேக் மலைக்குச் (Camelback Mountain) சென்று இருந்தேன். அங்கே வெளியில் உள்ள ஒரு வனாந்தரத்தினூடாக, தெற்கு மலைக்குப் பின்பாக குட்டிக் கழுதைகளைத் துரத்தியவாறே, நான் 33 வருடங்களுக்கு முன்பு குதிரையில் சவாரி செய்திருக்கிறேன். அரிசோனாவில் இனியும் எதுவும் மீதியாக விடப்பட்டுள்ளன என நான் எண்ணவில்லை; சாலைகளும் நெடுஞ்சாலைகளும் முழுவதுமாக பிரிக்கப்பட்டு விட்டன. நல்லது, ஒரு காரியம் என்னவெனில், ‘நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்நகரம் வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.’ ஜனங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்து இருக்கிறேன், நீங்கள் வெளியே சென்று பரவ வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால் பழைய கற்றாழை வகை செடிகள் நிறைந்து காணப்படும் இடங்கள் வீட்டு மனை திட்டங்களாக (housing projects) மாறுவதை நான் அப்படியே வெறுக்கிறேன். அப்படியே அவ்விதமாக காணப்படுகிறது... நான் அதைக் காண்பதை வெறுக்கிறேன். நான் அதைக் காண்பதற்கு போதுமான காலம் தங்கி இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன். அது... நான் – நான் எப்படியாயினும் அசலானதையே விரும்புகிறேன். ஓ, நீங்கள் அழகான வீடுகளைப் பெற்று இருக்கிறீர்கள்; அது உண்மை. ஆனால் அது – அது தாறுமாறாக்கப்பட்டு உள்ளது; அதைத் தான் மனிதன் செய்திருக்கிறான். அழகைக் குறித்த என்னுடைய அபிப்பிராயம் என்னவெனில், அது மனிதன் உண்டாக்கி இருப்பவைகள் அல்ல, ஆனால் தேவன் அதை உண்டாக்கியிருக்கும் வழியில் தான் அழகைக் குறித்த என்னுடைய அபிப்பிராயம் உள்ளது. சற்று அதைப் பாருங்கள், அவ்விதமாகத் தான் நான் அதை விரும்புகிறேன். 7. ஆனால் நம்முடைய தேசமானது மோசமாகிக் கொண்டிருக்கிறது, அல்லது நம்முடைய ஜனங்கள் சீர்கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றனர், இங்கேயுள்ள ஒவ்வொன்றும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நான் மகத்தான பார்வோன்கள் ஒரு சமயம் நின்றிருந்த இடங்களிலும், உலகத்தை அரசாண்ட மகத்தான படை பலம் கொண்ட நாடுகள் இருந்த இடங்களிலும் நான் நின்றிருக்கிறேன். அவர்கள் இராஜ்ஜியங்களுடைய அழிவைக் காண நீங்கள் பூமிக்குக் கீழே 20 அடி தோண்ட வேண்டும். ரோமானிய சீசர்கள் இருந்த இடத்தில், (அவர்கள்) தெருவில் நடந்து, ‘இங்கே இருந்து 20 அடி கீழே தான் இன்னார் இன்னார், மகத்தான சக்கரவர்த்தி இருந்தான்...’ என்று கூறினார்கள். ஓ, என்னே. அங்கே... ஏனென்றால் நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. எங்களுடைய நம்பிக்கை இயேசுவின் இரத்தத்திலும், நீதியிலுமே அன்றி வேறு எதிலும் கட்டப்படவில்லை; சுற்றிலும் என் ஆத்துமா தளர்ந்து போகும் போது அவரே என் நம்பிக்கையும் நான் தங்குமிடமாகவும் உள்ளார். கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நிற்கிறேன்; மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே. (நாம் அதைத் தான் எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.) 8.மேலும் இப்பொழுது, இன்றிரவு ஜனங்கள் ஓரங்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். நாளை இரவு, அவர்கள் அந்த அரங்கத்தில், அல்லது அது என்ன.., மடிசன் ஸ்க்வெயர் கார்டனில் (Madison Square Garden) இருக்க வேண்டி உள்ளது என்பதை உணர்கிறேன். நான் ஊகிக்கிறேன், அவர்கள் இப்பொழுது மேற்குக்கு அதைக்கொண்டு வந்திருக்கவில்லை என்று நம்புகிறேன். 9. ஒவ்வொன்றும் மேற்கிற்கு போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு சிறு செய்யுளைக் குறித்துக் கேள்விப்பட்டேன், அது இவ்வாறு கூறுகிறது: அவர்கள் ஆடு மாடுகள் புல் மேயும் மேய்ச்சல் நிலங்களை சீர்குலைத்து விட்டனர்... கிழக்கத்திய ஜனங்கள் மேற்கிற்கு வந்த போது, அவர்கள் இங்கேயுள்ள எல்லா மேய்ச்சல் நிலங்களையும் குழிப்பந்தாட்ட விளையாட்டுகளமாக மாற்றி விட்டனர். அவர்கள் பழமையான கால்நடைப்பட்டியை எடுத்துப்போட்டு விட்டு, நீச்சல் குளத்தை உண்டாக்கி விட்டனர்; சிறு ஓநாயை நியூயார்க் மிருக காட்சி சாலையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இவ்வாறு கூறுகிறது, ஒரு காரியம் மாத்திரமே விட்டுவைக்கப்பட்டுள்ளது, அது பருத்தி மரத்தின் மீது அவர்கள் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு கயிறு தான். எனவே அவ்வழியில் தான் அது போகிறது என்று நான் ஊகிக்கிறேன். அது சரியே. அது... 10. நாகரீகமானது கிழக்கிலிருந்து மேற்கிற்கு கடந்து செல்கிறது என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்தது உண்டா-? நாகரீகமானது எங்கே போனாலும், அது போகிற வழியில் கறைப்படுத்துகிறது. அது முற்றிலும் உண்மை. இன்றிரவு நான், ஒரு குறை காண்பவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இல்லையா-? ஆனால் அது... கர்த்தருக்குச் சித்தமானால், கிழக்கும் மேற்கும் சந்திக்கும் நேரத்தில், நான் இங்கிருக்கும் போது இரவுகளில் ஒன்றில், பிரசங்கிக்க விரும்புகிறேன். அதைத்தான் அவர்கள் செய்துள்ளனர். நாம்... பழமையான நாகரீகமானது சீனாவாக உள்ளது. நாம் மேற்கிற்கு நேராகப் போவோமானால், நாம் திரும்பவும் சீனாவிற்குள் செல்வோம். நமக்கிடையே சமுத்திரத்தைத் தவிர வேறு ஓன்றுமில்லை. கிழக்கும் மேற்கும் ஒன்றாக அசைந்து செல்கிறது. 11. பகலுமில்லாமல் இரவுமில்லாமல், ஒருவகையான மந்தாரமாக இருக்கும் ஒரு நாள் வரும் என்று தீர்க்கதரிசி உரைத்துள்ளதாக வேதாகமம் கூறுகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; ஆனாலும் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். 12. இப்பொழுது, நாகரீகமானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பிரயாணம் செய்து உள்ளது. பூகோளரீதியாக சூரியனானது உதிக்கையில், அது கிழக்கில் உதித்து, மேற்கு நோக்கி பிரயாணம் செய்து, மேற்குக்குச் செல்கிறது. 13. எனவே, சுவிசேஷ வெளிச்சத்தைக் கொண்டு வந்த போது, கு-மா-ர-ன் என்ன செய்தார் என்பதை நாம் கவனிப்போம். கிழக்கத்திய ஜனங்களிடம் அது தொடங்கிய போது, அங்கே ஒரு பெந்தெகோஸ்தே இருந்தது. அங்கே பரிசுத்தாவி ஆனவரின் ஊற்றப்படுதலும், அடையாளங்களும், அற்புதங்களும், இயற்கைக்கு மேம்பட்டவைகளும், மகத்தான காரியங்களும் சம்பவித்தன. 14. இப்பொழுது, பகலுமல்லாமல் இரவுமல்லாமல் இருக்கிற ஒரு நாளை நாம் கொண்டு இருக்கிறோம்; இது மந்தாரமான நாள். சபையைச் சேர்ந்து, புஸ்தகத்தில் பெயரை எழுதுவதற்கு போதுமானது நமக்கு உண்டு, ‘ஆனாலும் சாயங்கால நேரத்தில் வெளிச்சமுண்டாகும்.’ கிழக்கில் உதிக்கிற அதே சூரியனே மேற்கிலும் அஸ்தமிக்கிறது. மேலும் இப்பொழுது, அநேக வருடங்களாக இருக்கும் அந்த மகத்தான பரிசுத்தாவியானவரே காலங்களின் ஊடாக இரட்சிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்காகவும், சபையின் மத்தியிலும், ஸ்தாபனங்கள் மத்தியிலும், மேலும் மற்றவைகளிலும் போதுமான வெளிச்சத்தைப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். 15. ஆனால் இப்பொழுது சாயங்கால வெளிச்சம் வந்துள்ளது. இப்பொழுது அதே பரிசுத்த ஆவியானவர் அதே வெளிப்பாட்டுடன், அதே காரியங்களை, அவர் செய்த அதே கிரியைகளைச் செய்து வருகிறார். அவருடைய நாமத்திற்கென்று புறஜாதிகளிலிருந்து ஒரு ஜனத்தைப் பிரித்தெடுக்கும்படி, மேற்கத்திய ஜனங்களிடம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். 16. மேலும் இப்பொழுது கிழக்கும் மேற்கும் ஒன்றாக வந்திருக்கிறது, நாகரீகமானது ஒன்றோடொன்று முட்டி மோதியிருக்கிறது, உலகமானது எப்பொழுதும் கண்டதிலேயே அல்லது சம்பவிக்குமென்று கற்பனை செய்ததிலேயே அதிக முட்டாள்தனமான, நாகரீகமற்ற நிலைகளில் ஒன்று உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் அதை ஒரு இரவில் பெற்றுக் கொள்வோம்; அது என்ன – இன்றிரவு நான் பேசப் போவதாயிருந்தது அதுவல்ல. ஆனால் நிச்சயமாக ஒரு நேரம் உள்ளது, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். அதைத் தான் நான் ஜனங்களிடம் இடைவிடாமல் எச்சரிக்கை செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 17. நாம் என்ன செய்யக் கூடும்-? அங்கே இனிமேலும் எதிலும் நம்பிக்கை இல்லை, கிறிஸ்துவில் மட்டுமே. சற்று அதை ஞாபகம் கொள்ளுங்கள். கிறிஸ்து மட்டுமே நமக்கு ஆதரவாயிருக்கிறார். 18. ஜனநாயகத்தின் மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. இப்பொழுது, அது சரியாக இருந்தது; ஆனால் அது இயங்கிக் கொண்டிருக்கிறது; அது அதனுடைய வாழ்க்கையை வாழ்ந்தது. இராஜாக்கள் தங்களுடைய ஜீவனத்தையும், இராஜ்ஜியங்களையும், சர்வாதிகாரங்களையும், தங்களுடைய நாளில் ஜீவித்து இருந்த எல்லாவற்றையும் கொண்டு அரசாட்சி செய்தனர். ஜனநாயகம் அவர்கள் கொண்டு இருந்ததிலேயே சிறந்த காரியமாக இருந்தது. ஆனால் அது அரசியல் மூலமாக மிகவும் கறைப்பட்டுள்ளது; அது நடுப்பாகம் வரை அழுகிப்போயுள்ளது, அதில் நம்பிக்கையே இல்லை. நீங்கள் புகைச்சலோடு மெள்ள எரிந்து கரிக் கட்டையான பட்டணத்தைக் கட்ட முயற்சி செய்வது போலுள்ளது. உங்களால் அதைக் கட்ட முடியாது. அது பாழாகிப் போய் விட்டது. அது அவ்விதமாகத் தான் இருந்தாக வேண்டும். அது அந்த வழியில் தான் வந்தாக வேண்டும். அது அவ்விதமாக இருக்கும் என்று வேதாகமம் கூறுகிறது. 19. ஒவ்வொரு தேசத்தையும் ஆளுகை செய்வது சாத்தானே. ஒவ்வொரு இராஜ்ஜியமும் சாத்தான் உடையதாக உள்ளது. அவனுடைய சொந்த வழியிலான ஒழுங்கின்படி அவன் அவைகளை ஆளுகிறான். ஆனால் அவன் ஒரு நாள் தேவ குமாரனிடம் அவைகளைக் கொடுக்கவில்லையா-? ‘இவைகள் என்னுடையவைகள், உலகத்திலுள்ள அனைத்து இராஜ்ஜியங்களிலும் நான் விரும்புகிறவைகளைச் செய்கிறேன்.’ அதன் காரணமாகத்தான் அவர்கள் சண்டை இடுகிறார்கள், கொலை செய்கிறார்கள், கொன்று போடுகிறார்கள். 20. ஆனால் இயேசு, ‘எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே,’ என்றார். 21. அவர் அவைகளை சுதந்தரித்துக் கொள்வார் என்பதை அறிந்திருந்தார். ‘சகல வானங்களே, பரிசுத்த தீர்க்கதரிசிகளே, களிகூருங்கள், இவ்வுலகத்தின் இராஜ்ஜியங்கள் நம்முடைய கர்த்தரின் இராஜ்ஜியங்களாயின, அவர் அதை அரசாளுவார், ஆயிரம் வருஷங்கள் இராஜ்ஜியபாரம் பண்ணுவார்.’ அதன் பிறகு இனி அங்கே யுத்தமில்லை. ஓ, வரப்போகும் அந்த மகத்தான நாள். 22. ஓ, நான் கிறிஸ்துவின் நாமத்தில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே இருக்கும் அருமையான ஜனங்களாகிய நீங்கள் உங்கள் எல்லா நம்பிக்கை யையும் அவர் மேல் வையுங்கள். அவர் மாத்திரமே அஸ்திபாரமாக இருக்கிறார். ஒரு அதிர்வு (shaking) வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகம் சுக்கு நூறாக அழிக்கப்பட்டு விடும். இராஜ்ஜியங்கள் சுக்கு நூறாக ஆட்டம் காணும். தேசங்கள் சுக்கு நூறாக குலுக்கப்படும். எல்லாவற்றிற்கும் முடிவில் நாம் இருக்கிறோம். ‘ஆனால் அசைக்க முடியாத ஒரு இராஜ்ஜியத்தை நாம் பெற்றிருக்கிறோம்; அது நிலையான, அசையாத, தேவனுடைய இரக்கத்தில் எப்போதும் நிரம்பி இருக்கிறது.’ ஓ, நான் அதை நேசிக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்காக இன்றிரவு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், நான்-நான்-நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லாதிருந்தால் அநேகமாக தற்கொலை செய்திருப்பேன். இக்காரியங்களை அறிவதற்காகவும் காணுவதற் காகவும் இந்த வரத்தைக் கொண்டு கர்த்தர் என்னை செய்ய அனுமதிக்கும் காரியங்களை முன்னரே காணுவதற்கும், புரிந்து கொள்வதற்கும், அப்படியே நான் அதைக் காணட்டும்... அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில் அது சீக்கிரமாக சம்பவிக்கும் என்பதை நான் அறிவேன். பாருங்கள்-? அது எவ்வளவு சமீபமாய் இருக்குமோ அவ்வளவு சமீபமாய் வருவதைப் பாருங்கள், அது என்னிலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் என்னை சத்தமிட வைக்கிறது. ஓ, வருங் கோபத்துக்கு தப்பி ஓடுங்கள். 23. தேவனே, இரக்கமாயிரும். பரலோகப் பிதாவே, ஓ தேவனே, நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, எப்படியாவது எங்களுக்கு சகாயம் பண்ணும். இந்த மகத்தான ஏதோவொன்றைக் குறித்த ஒரு புரிந்து கொள்ளுதலை எங்களுக்குத் தாரும். ஒரு சர்ப்பத்தைப் போன்று தவறு செய்தல், அதைப்போன்று கவர்ந்து, ஒரு சமயம் பறவையானது சுதந்திரமாக மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது சர்ப்பமானது பறவையின் கண்களை கவர்ந்து கொண்டது. அது வளைந்து நெளிந்து சென்று, ஒரு வழியை கொடுத்தது, உடனே அது அவனுடைய வாய்க்குள்ளும், அவனுடைய விஷம் உள்ள கூர்மையான பற்களுக்குள்ளும் இருக்கும். தேவனே, இரக்கமாயிரும். தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிபூரணமாக நங்கூரமிடப்படாமல், இன்றிரவு இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் இன்றிரவு வந்து ஆவியில் புதிதாக பிறப்பார்களாக, கர்த்தாவே, அவர்களுடைய நம்பிக்கையானது அவருடைய வருகையின் மேல் இருப்பதாக, ‘அவருடைய வருகையை விரும்பும் யாவருக்கும்.’ இதை அருளும், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 24. கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு 1-பேதுருவின் புஸ்தகத்தில் இருந்து என்னுடைய பாடத்தை எடுக்க விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் வாசிக்க விரும்பினால், 1-பேதுரு.5-ம் அதிகாரம், 5-ம் வசனத்திலிருந்து தொடங்கலாம்: 1-பேதுரு.5:5 முதல். அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளு ங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். 25. என்னவொரு அருமையான வேத வாசிப்பு-! இப்பொழுது, ‘அவர் உங்களை விசாரிக்கிறவர்,’ என்பதன் பேரில் ஒரு பாடத்திற்காக இதை எடுக்க விரும்பினேன். 26. மேலும் அது பரி.யோவான் 14-ம் அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ளது. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி இல்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லி இருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். 27. இந்த வேதவாக்கியத்தின் மற்றொரு செய்தி என்னவெனில், அவர் பிதாவிடம் ஜெபித்து, வேறொரு தேற்றரவாளனை நமக்குக் கொடுப்பார் என்பதாகும். அந்த தேற்றரவாளன் பரிசுத்தாவியே. அவரை உலகம் பெற்றுக் கொள்ள மாட்டாது, ஆனால் விசுவாசிகளுக்கு அவர் ஒரு தேற்றரவாளன் ஆவார். ‘அவர் வரும்போது, அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார், நான் உங்களிடம் போதித்த காரியங்களை உங்களுக்கு நினைப்பூட்டுவார், வரப்போகிற காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார்.’ ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர்... 28. பவுலினுடைய நாட்களில், அவன், ‘நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷைகளில் பேசி, அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் இல்லையென்றால், கல்லாதவர்கள் உங்கள் மத்தியில் பிரவேசித்தால், அப்பொழுது அவிசுவாசிகள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்று சொல்வார்களே. ஆனால் தீர்க்கதரிசனம் சொல் கிறவன் ஒருவன் இருந்து, இருதயத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் முகங்குப்புற விழுந்து, தேவன் மெய்யாய் உங்களுடன் இருக்கிறார் என்று சொல்லுவார்கள்,’ என்றான். 29. இங்கே இந்த நாளிலும் அதே தேற்றரவாளனே; அவர் அப்போது செய்திருந்த அதே விதமாகவே தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். என்னவொரு ஆறுதலான வாக்குத்தத்தம்... 30. இப்பொழுது, எல்லாருக்கும் இந்த அற்புதமான தேற்றரவாளன் கிடையாது. அவர்களுக்கு – அவர்களுக்கு கிடையாது... அவர்களுக்கு அது கிடையாது. அவர்கள் அதை மறுக்கின்றனர்; அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர், ஏனெனில் அவர்களுக்கு அதில் சற்றும் விசுவாசம் கிடையாது. 31. நீங்கள் இந்த அற்புதமான தேற்றரவாளனை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே வழி என்னவெனில், நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, உங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட கிறிஸ்தவ ஞான ஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள், (அப்பொழுது) தேவன், பரிசுத்த ஆவியால் உங்களை நிரப்புவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அவர் அந்த வார்த்தையை மீற முடியாது. அது அவருடைய வாக்குத்தத்தமாக உள்ளது. நான் எப்பொழுதும் இதை சொல்லி இருக்கிறேன், ஒரு நபர் முழுமையாக போதிக்கப்பட்டு, மனந்திரும்பி, அவர்களுக்குள் இருக்கிற எல்லாவற்றுடனும் தங்களுடைய இருதயத்திலிருந்து தேவன் மேல் விசுவாசம் கொண்டு, அவர்கள் ஞான ஸ்நானம் பெற்றுக் கொண்டால், உடனே பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வருவார், ஏனெனில் அவர் அவ்வாறு செய்வதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். ‘நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள், வாக்குத்தத்தம் உங்களுடையது.’ 32. இப்பொழுது, ஜனங்கள் இன்று அதைப் பெற்றுக் கொள்ளாததன் காரணம் என்னவெனில், அவர்களுடைய ஜீவனத்துக்கான ஆசைகள் அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்துடன் குறுக்கிடுகிறது. உலகமானது – மனிதன் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறான் என்று வேதாகமம் கூறுகிறது, ஏனெனில் அவர்களுடைய கிரியைகள் பொல்லாப்பானதாயுள்ளது. இருளிலே நடக்கிறதை விரும்பி, பொல்லாப்பானதை நடப்பிக்கும் ஒரு நபர் தீய கிரியைகளை விரும்புகிறான், அவனால் பரிசுத்தாவியை நேசிக்க முடியாது. ஏனெனில் வேதாகமம், ‘நீங்கள் உலகத்திலோ அல்லது உலகத்தின் காரியங்களையோ நேசித்தால், தேவனுடைய அன்பு உங்களில் (கொஞ்சம் கூட) இல்லை,’ என்று கூறுகிறது. 33. இப்பொழுது, இந்த வேத வாக்கியங்களை இதற்கு முன்பாக நீங்கள் கேட்டு இருக்கலாம், ஆனால் நாம் அவைகளுக்கு கவனம் செலுத்துவோம். அவைகள் சத்தியம் தானா-? நீங்கள் இன்றிரவு இச்சபையில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் அவைகள் அதிக சத்தியமாக உள்ளன. இது அரிசோனா மாநிலம் என்பதைக் காட்டிலும் அவைகள் அதிக சத்தியமாக உள்ளன. நீங்கள் ஒரு மனிதனாக ஜீவிப்பதைக் காட்டிலும் அவைகள் அதிக சத்தியமாக உள்ளன. அவைகள் தேவனுடைய நித்திய வார்த்தைகளும், அவருடைய வாக்குத் தத்தங்களுமாய் இருக்கின்றன. எல்லா வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், அந்த வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. அவைகளுக்கு அர்த்தம் உண்டு, அவைகள் மேன்மைமிக்கவைகளாக அர்த்தம் கொண்டுள்ளன. ஆனால் தேவன் அவைகளை உங்களுக்கு வெளிப்படுத்தும் வரையில் அவைகள் உங்களுக்கு எதையும் ஒரு போதும் அர்த்தப்படுத்துவதில்லை. அவர் நம்மை விசாரிக்கிறார் என்பதை அறிவதென்பது எவ்வளவு அருமையானது-! 34. ஆகவே மனிதன்... அவன் தேற்றரவு பண்ணப்படுவதை விரும்பும் விதமாக உண்டாக்கப்பட்டு இருக்கிறான். ஆகவே அவன் தேவனுடைய வழியை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால், அவன் தனக்காகவே ஒரு வழியை எடுத்துக் கொள்கிறான். பரிசுத்த ஆவியின் இடத்தை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக அவன் ஏதோவொன்றை பதிலீடாக எடுத்துக் கொள்ள முயற்சிப்பான். ஓ, நீங்கள் அதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளாத ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ, சாத்தான் அவர்களுக்கு கொடுக்கும் ஏதோவொரு பயங்கரமான பதிலீடை எடுத்துக் கொண்டு, தங்களுக்குத் தாங்களே தேற்றரவு பண்ண முயற்சிப்பார்கள். சாத்தானிடம் அநேக பதிலீடுகள் இருக்கின்றன. ஆனால் பெந்தெகொஸ்தே வானங்கள் முழுவதும் உண்மையான காரியங்களால் நிறைந்து இருக்கும் போது, நாம் ஏன் ஒரு பதிலீடைக் கொண்டிருக்க வேண்டும்-? சுத்தமான மேசை முழுவதும் மிகுந்த விரும்பப்படத்தக்க ஆகாரங்களால் நிறைந்து இருக்கும் போது, நான் ஏன் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து புசிக்க வேண்டும்-? நான் அதை செய்வேனென்றால், எனக்கு ஏதோ மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது அந்த இடத்தை எடுத்துக் கொள்வதற்காக ஏதோ ஓன்றை பதிலீடாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் அந்த மனிதனைக் காண்பது என்னவொரு பரிதாபமாக உள்ளது. சில சமயங்களில் வெளியே போவதன் மூலமாக அவனுடைய மனசாட்சியை அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பான்... 35. சில சமயங்களில் தங்களுடைய பெண் பிள்ளைகளை பிரபலமானவர்களாக இருக்கும்படி-அவர்களை அவ்வாறு ஆக்கும்படி - கற்றுக் கொடுக்க முயற்சிக்கும் தாய்மார்களைப் போல... அவர்கள்... அவர்களுடைய முழுமையான நோக்கம் என்னவெனில் அந்த வாலிப பெண்ணானவள் ஒரு– ஒரு நாட்டிய நாடக நிகழ்ச்சியில் நடனம் ஆடுபவளாகவோ அல்லது ஏதோ ஓன்றாகவோ இருக்கும்படி ஆக்குவது தான். நீங்கள் அவளுக்கு ஒரு வகையான விஷத்தைக் (strychnine) கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்; நீங்கள் அவளுக்கு கடும் விஷத்தைக் (arsenic) கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது அவளுடைய இருதயத்தை உடைத்து, அவளை சாத்தானுடைய கல்லறைக்கு அனுப்பவோ அல்லது சாத்தானுடைய நரகத்திற்கோ, ஒரு பாவியினுடைய கல்லறைக்கோ அனுப்புவதைத் தவிர (வேறு) எதுவும் செய்யாது, அதிலிருந்து நன்மையானது எதுவும் வரமுடியாது. ஆனால் நீங்கள், ‘என்னுடைய மகள் இப்படி - இப்படிப்பட்டவளாக இருக்க முடிந்தால்,’ என்று எண்ண முயற்சிக் கிறீர்கள். நம்முடைய இளைஞர் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு (YWCA) கூட நீங்கள் அவர்களை அதிகமாக அனுப்புவீர்கள், அங்கே ராக் அன்ட் ரோல் நடனங்கள் ஆட பயிற்சி எடுக்கிறார்கள். வயதான ஜனங்கள் தானிய களஞ்சிய நடனங்களையோ அல்லது ஏதோவொரு வகையான சமூக கிராமிய நடனங்களையும் தவிர்த்து விடுவார்கள். 36. அவர்களுக்கு ஏறக்குறைய 30 வயதாகும் போது, அவர்கள் மனச்சோர்வுகளை அடைந்து விடுகிறார்கள். அவர்கள், ‘நான் இந்த வயதை அடைந்த காரணத்தால், நான் இன்னும் போதுமான காட்டு ஓட்ஸ்களை விதைக்கவில்லை,’ என்று எண்ணுகின்றனர். அவர்கள் – அவர்கள் சில சமயங்களில் - மனிதர்கள் ஸ்திரீகள் இருவருமே தங்களுடைய விவாகப் பொருத்தனைகளை மீற முயற்சிக்கின்றனர். அவர்கள் இருவருமே குற்றமுடையவர்களாக இருக்கின்றனர். என்ன காரியம்-? அவர்களுக்கு ஏதோ ஓன்று குறைவுபடுகிறது. 37. சில சமயங்களில் அவர்கள் மது அருந்துகின்றனர். அவர்களுக்கு வயதான பிறகு, ஏன், அவர்கள் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தத் தொடங்குகின்றனர். அவர்கள் குடிக்கும் போது, அதை மறக்க முயற்சிக்கின்றனர். அப்படியே கொஞ்சமாகக் குடித்து, அதன் பிறகு இன்னும் கொஞ்சம் மதுவை வாங்கு கின்றனர், சிறிது கழிந்து அவர்கள் மதுவுக்கு அடிமையாகி அழிந்து போகின்றனர். 38. சில சமயங்களில் பிரபலமாக இருப்பது – அவர்கள் வீதிகளில் தொலைக் காட்சி பார்க்கின்றனர், புகை பிடிக்கின்றனர், ஸ்திரீகள் சிகரெட்டுகளை புகைக்க ஆரம்பித்த போது, அது தான் இருபதாவது நூற்றாண்டில் ஸ்திரீகள் செய்ததிலேயே கீழ்த்தரமான காரியமாக உள்ளது. அது தான் இந்த தேசம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே ஐந்தாவது மகத்தான பத்திரிகை எழுத்தாளராக (fifth columnist) இருக்கிறது. அது ஒழுக்க நெறிகளை உடைத்துப் போட்டது; இங்கேயுள்ள இந்த பைத்தியக்காரர்களுக்கான மருத்துவமனைகளுக்கு அது – அது தான் ஏராளமான பைத்தியம் பிடித்த ஜனங்களை அனுப்புகிறது; மருத்துவமனைகள் முழுவதுமாக காச நோயாளிகளையும், புற்று நோயாளி களையும் அது அனுப்பி வைக்கிறது. ஒவ்வொன்றும் அதிலிருந்து வளர்ந்து விடுகிறது. இருப்பினும் அவர்கள் தேறுதல் அடையும்படி அதை செய்கின்றனர். 39. நாம் தேறுதலைடையும்படிக்கு தேவன் ஏதோவொன்றை நமக்குக் கொடுக்கிறார்: பரிசுத்த ஆவி தான் தேவனுடைய தேற்றரவாளனாக இருக்கிறார். இக்காரியங்கள் இறுதியில் குழப்பத்திற்கும், வஞ்சிப்பதற்கும், திருடுவதற்கும், தவறான காரியங்களைச் செய்வதற்கும் வழிநடத்தும் பதிலீடுகள் மட்டுமே. 40. அன்றொரு இரவு என்னுடைய சிறிய பெண் என்னிடம் கேட்டாள்; அவள் சொன்னாள்... அல்லது அது சிறிய ஜோசப் (சொன்னது), அவன், ‘அப்பா, சூனியக்காரி என்ற அப்படிப்பட்ட காரியம் உண்டா-?’ என்று கேட்டான். நான், ‘ஓ, நிச்சயமாக,’ என்றேன். 41. அவன், ‘அவளுக்கு நீளமான மூக்கு உண்டா-? அவள் இரவு வேளையில் ஒரு துடைப்பத்தின் மேல் சவாரி செய்வாளா-?’ என்று கேட்டான். 42. நான், ‘இல்லை. அவளுக்கு வர்ணம் தீட்டப்பட்ட முகம் உண்டு, அவள் ஒரு– ஒரு மதுபான விருந்திற்கு போவதற்காக காடிலாக் காரில் பிரயாணம் செய்கிறாள்,’ என்றேன். அது தான் அதனுடைய நவீன வேறுபட்ட வடிவமாகும். 43. அவன், ‘அவள் தான் சூனியக்காரியா-?’ என்றான். அது தானா இல்லையா என்று நான் அவனிடம் சொல்ல வேண்டுமா என்பது எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவன் தெருவில் அப்படிப்பட்ட ஒன்றைக் காண்கிறான். அவன், ‘அப்பா, அங்கே ஒரு சூனியக்காரி இருக்கிறாள், இல்லையா-? என்றான். நல்லது, நான் அதை யூகிக்கிறேன்... 44. உங்களுக்குத் தெரியும், அவர்கள் வழக்கமாக பழங்காலத்து சார்லி பார்லிகார்னை (Charley Barleycorn) கொண்டிருக்கின்றனர். வயதான ஜனங்களாகிய உங்களில் சிலருக்கு அவனை ஞாபகம் இருக்கும், அவன் தன்னுடைய தொப்பியை காதுகள் வரை இழுத்து விட்டிருப்பான். ஒரு காகம் கூட அவனைக் கண்டு பயப்படும்: சார்லி பார்லிகார்ன். ஓ, மதுவிலக்கு நடைமுறையிலிருந்து விலக்கப்பட்ட முதற்கொண்டு அவன் மாறி விட்டான். ஆனால் அவன் இப்பொழுது ஒரு சிறு முட்டுத்தாங்கியில் (bumper) இருக்கிறான், ஒவ்வொரு குளிர்பதனப் பெட்டியிலும் இருக்கிறான், மேலும் அவன் பட்டணத்திலேயே மிகவும் பிரபலமான ஒருவனாகி விட்டான். ஆனால் அவன் இன்னும் மனிதர்களின் ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்புவதற்கும், வாலிப ஜனங்களை பயித்தியக்காரர்களுக்கான மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்குமான அதே வெறுக்கத்தக்க காரியமாக இருக்கிறான்; மேலும் இங்கே ராக் அன்ட் ரோல் முட்டாள்கள், நவீன இசைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள், இளம்பருவத்தினரின் குற்றங்கள் ஆகியவற்றினுடைய ஒரு காலத்தைப் பெற்றிருக்கிறோம். அது பயித்தியக்கார நிலையை அடையும் வரையில் செல்கிறது. நம்முடைய பள்ளிகள் கூட அவர்களைத் தொட முடியாத அளவுக்கு; நாம் கடந்த வருடத்தில் 20,000 ஆசிரியர்களை இழந்து உள்ளோம். 45. ஏன், அவர்கள் ஏதோவொன்றைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதற்காக காத்திருக்கின்றனர், அதை அவர்களுக்குக் கொடுக்க சபையானது தவறி விட்டது. அவர்கள் அதை செய்யக் காரணம் என்னவெனில், அவர்கள் அதைத் தேடும் விதமாக உண்டாக்கப்பட்டு இருக்கின்றனர். 46. இறுதியாக, அது எதில் முடியப் போகிறது, கொலையிலும் தற்கொலையிலும் தான். மனிதன் தன்னுடைய அண்டை வீட்டானின் மனைவியுடன் ஒரு தேதியைக் குறித்துக் கொள்ளும் போது, அல்லது ஏதோவொரு வீட்டை உடைக்கும் போதோ அல்லது ஏதோவொரு ஸ்திரீ பிரிந்து வரும்படி செய்யும் போதோ, தான் ஏதோ ஓன்றை செய்து கொண்டு இருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறான். நீங்கள் ஏதோவொன்றைப் பெற்றுக் கொள்வதாக எண்ணிக் கொள்கிறீர்கள், ஆனால் கடைசியாக நீங்கள் ஒரு துப்பாக்கியை உங்களுடைய தலையின் பக்கத்தில் வைத்து உங்களுடைய மூளையை வெடிக்கச் செய்தோ அல்லது குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான எங்கேயோ உள்ள ஏதோவொரு இடத்திலிருந்து குதிப்பவர்களாகவோ அல்லது விஷம், அபின் அல்லது ஏதோ ஓன்றைக் கொண்டு உங்களை நீங்களே சாகடிப்பவர்களாகவோ, மேலும் பரிதாபமான ஒரு நிலைக்குச் சென்று, மரித்து சாத்தானுடைய நரகத்திற்கு போகிறவர்களாகவோ நீங்கள் முடியப் போகிறீர்கள், ஏனெனில் நீங்கள் உண்மையான நிவாரணத்தைப் புறக்கணித்து இருக்கிறீர்கள். 47. நாமோ ஒரு நிவாரணத்தைப் (cure) பெற்றுள்ளோம். கல்வாரி தான் அந்த நிவாரணம். கிறிஸ்துவே நிவாரணமாய் இருக்கிறார். அவர் மாத்திரமே நிவாரணமாகவும், ஒரே அஸ்திபாரமாகவும், ஒரே வழியாகவும் இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய காரியங்கள் உள்ளன, அவைகளை வேறு எவ்விடத்தில் இருந்தும் உங்களால் பெற்றுக் கொள்ள இயலாது. கிறிஸ்துவே வழியாக இருக்கிறார்; ஒரு வழியல்ல, அதுவே வழி. சபை அருமையானது தான்; நாம் அவைகளை நேசிக்கிறோம்; ஆனால் சபையானது அந்த வழியல்ல. இயேசுவே வழியாக இருக்கிறார். உங்களுடைய கவலைகளை சபையின் மேல் வைக்க முடியாது, சபையில் இரட்சிப்பு கிடையாது. அது உங்களை இயேசுவை நோக்கி மாத்திரமே சுட்டிக் காட்டுகிறது. அவர் மாத்திரமே இரட்சிப்பாக இருக்கிறார். அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். பிதாவிடம் வருவதற்கான ஒரே வழி இயேசு தான். அவர் மாத்திரமே தேற்றரவாளனாக இருக்கிறார், நம்மை எவ்விதம் விசாரிப்பது என்று அறிந்துள்ளவர் அவர் மாத்திரமே, நாம் ஒருவர் மற்றொருவருக்காக கூட கவலைப்பட முடியாது. 48. ‘கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால்,’ என்று சொல்லப்பட்ட இடத்தை கொஞ்ச காலத்திற்கு முன்பு வேத வாக்கியத்தில் வாசித்தேன். நான், ‘என்னவொரு வாக்குமூலம்,’ என்று எண்ணினேன், 1 கொரிந்தியர் 11–ல் அதைக் காணலாம். ...கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால்... இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாய் இருக்கிறார்கள்... 49. கர்த்தருடைய சரீரம் என்பது சபையாகும். ஒருவர் மற்றவரை விசாரிப்பதற்கு போதுமான ஆவிக்குரிய நிதானிப்பு நமக்கு கிடையாது. நாம் ஒருவருக்கொருவர் விசாரிக்க கூடாதிருந்தால், நாம் எவ்விதம் விசாரிக்கக் கூடும்-? இழக்கப் பட்டவர்களுக்காகவும் மரித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் நாம் எவ்வாறு கவலைப்பட முடியும்-? நாம் அவர்களை எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடும்-? ‘நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்து விடுவோம், அவரே உங்களை விசாரிக்கிறவர்.’ 50. மனிதன் இந்தக் குறுக்கு வழிகளை எடுத்துக் கொள்கிறான், அவர்களை அதைச் செய்ய வைப்பது என்ன-? காரணம் தேவனே, அவர் மனுஷனை உண்டாக்கின போது, அதை செய்யும்படி அவர் மனிதனை உண்டாக்கவில்லை. மனிதன் சந்தோஷமாக இருக்கவும், திருப்தியாக இருக்கவும், தேறுதலடையவுமே அவர் அவனை உண்டாக்கினார். மனிதனோ... தேவன் தம்முடைய பிள்ளைகள் தேற்றரவற்று இருக்கும்படி விரும்புவதில்லை. நீங்கள்... 51. ஏன், தாய்மார்களாகிய நீங்கள் எப்பொழுதாவது மிகவுமாக வியாதிப்பட்டால், நீங்கள் நடு இரவில் படுக்கையை விட்டு எழும்புவீர்கள்; உங்களுடைய மகன் தன்னுடைய போர்வையை உதைத்துக் கொண்டு இருந்தால், அந்த சிறு பையனுக்கு சளி தான் பிடித்திருக்க வேண்டும் என்று நீங்கள் அறிந்து, ஏதோ ஓரு வகையில் கடுமையாக முயற்சி செய்து, அவனை சௌகரியமாக வைக்கும்படியாக படுக்கை அருகில் செல்வீர்கள். உங்களுடைய அன்பார்ந்த வர்களில் ஒருவர் காய்ச்சலின் காரணமாக வியாதிப்படுக்கையில் இருந்தால், அவர்களை சௌகரியமாக இருக்கும்படி செய்ய, அவர்களுடைய முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி, ஒரு கந்தை துணியுடன் நீங்கள் அங்கேயே தங்கி இருக்கக்கூடும், நீங்கள் அதைச் செய்வீர்கள், உங்களுடைய பிள்ளைகளில் ஒருவனுக்காக. நீங்கள் அங்கேயே உட்கார்ந்திருப்பீர்கள், நீங்கள் வியாதிப்பட்டு, நீங்கள் தாமே படுக்கையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்த போதிலும், நீங்கள் இன்னும் அங்கேயே அமர்ந்திருப்பீர்கள்; ஏனெனில் உங்களுடைய பிள்ளைகள் உங்களுக்கு ஏதோ முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய ஒரு பாகமாக இருக்கிறார்கள்; அவர்கள் உங்களுடைய ஜீவனாய் இருக்கிறார்கள். 52. மேலும் சபையானது பூமியிலே தேவனுடைய ஜீவனாக உள்ளது. அவர் தம்முடைய சபையை தேற்றும்படி விரும்புகிறார். 53. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உங்களுடைய பிள்ளையின் புருவத்தை நீங்கள் துடைத்தால் அது அவனை சௌகரியமாக்கும் என்று நீங்கள் அறிந்திருந்து, அவன் அதை மறுத்து, தாயாரின் கரம் அல்லது ஏதோவொன்று அவன் மேல் தொடுவதற்குப் பதிலாக – பதிலாக, உங்களுடைய முகத்தில் துப்பி, அங்கு சென்று ஒரு குப்பி விஸ்கி அல்லது ஏதோவொன்றை எடுத்தால் அது எப்படியிருக்கும்-? 54. நாம் மற்ற பரிகாரங்களுக்கு திரும்பும் போது அதை தான் நாம் செய்கிறோம். அங்கே அநேக பரிகாரங்கள் உள்ளன, ஆனால் நிவாரணம் (Cure) ஒன்று மாத்திரமே உள்ளது. கிறிஸ்துவே நிவாரணமாய் இருக்கிறார், இதில் மாத்திரமே நிவாரணம் உள்ளது. அவர் நமக்காக கவலைப்படுகிறார். அவர் நம்மை நேசிக்கிறார், நாம் அவரிடம் வரும்படி அவர் விரும்புகிறார். அவ்விதமாகத் தான் தேவன் நம்மை உண்டாக்கி இருக்கிறார், தேறுதல் அடையும்படி வாஞ்சிக்கும் படியான பரிசுத்த காரியங்கள் நம்மில் உள்ளன. 55. மனிதனைத் தேற்றும்படி - அவனிடம் அன்பு காட்டும்படி தேவன் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கிறார், ஒரு நல்ல மனைவியை பெற்றிருக்கிற எந்த மனிதனும் அதை அறிந்திருக்கிறான். ஒரு நல்ல மனைவியைக் குறித்து ஏதோ ஓன்று உண்டு... ஒரு மனிதன் தன்னுடைய வியாபாரத்தில் அல்லது – அல்லது தன்னுடைய ஜீவியப் பாதையில் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வருத்தத்தோடு வீட்டிற்கு வரக்கூடும்; யாருமே இல்லையென்றோ, எந்த மருத்துவரும் இல்லை என்றோ கவலையில்லை... 56. அவ்விதமாகத்தான் எனக்கும் இருக்கிறது. நான் வெளி நாடுகளிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தாவது வரும் போது, நான் மிகவும் பதட்டம் உள்ளவனாகவும், நிலைகுலைந்து போனவனாகவும், தூக்கத்தை இழந்தவ னாகவும் வரும் போது. பசியாயுள்ள சிறு பிள்ளைகள் தெருவில் அழுவதை நான் கேட்கிறேன், அவர்களை நான் பார்க்கிறேன், ஓ, அழுது கொண்டு செல்கிறார்கள், அது அப்படியே என்னைக் கொன்று விடுகிறது. பிறகு நான் வீட்டிற்கு வரும் போது, என்னுடைய மனைவி, இருக்கையின் கை பக்கத்தில் உட்கார்ந்து, தன்னுடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, ‘ஓ, பில், நான் – நான் அதை புரிந்து கொள்கிறேன், உங்களுக்குத் தெரியும்,’ என்று கூறுவாள். 57. மனைவி இடமிருந்து வரும் சில தட்டிக் கொடுக்கும் சிறு காரியங்கள் அதிகமாக அர்த்தம் உள்ளதாகும்; ஒரு கணவனுக்கும் மனைவியிடம் அதே காரியம் இருக்கிறது. அந்த விதமாகத் தான் அது இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் அதற்குப் பதிலாக ஏதோ ஓன்றை பதிலீடாகப் பெறும் போது, அந்த ஸ்தானத்தை எடுக்கும்படி முயற்சிக்க வேறு ஏதோவொரு ஸ்திரீயை நீங்கள் பெற்றுக் கொள்ளும் போது, அல்லது மற்ற ஏதோவொரு மனிதனை பெற்றுக் கொள்ளும் போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். 58. இப்பொழுது, ஏன், அவர் நமக்கு நண்பர்களைத் தருகிறார். அவன் நேசிக்கிறான்... நாம் – நாம் நண்பர்களைக் கொண்டிருக்க வேண்டும். நமக்கு சகோதரர்கள் இருக்க வேண்டும். ஆபத்துக் காலத்தில் ஒரு நல்ல சிநேகிதனிடம் போய், ‘ஓ, என்னுடைய நண்பனே, குறிப்பிட்ட – குறிப்பிட்ட காரியம் சம்பவித்து விட்டது,’ என்று சொல்வதென்பது எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு நல்ல, நம்பிக்கைக்கு பாத்திரமான நண்பன் உட்கார்ந்து உங்களிடம் பேசுவான், அது அற்புதமானது. அது தேவனுடையதாக உள்ளது. உங்கள் மனைவி அப்படியே தேவனுடையவளாக இருப்பது போலவும், உங்களுடைய கணவன் தேவன் உடையவனாக இருப்பது போலவும். நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கும் போது. 59. ஆனால் மனிதன் கூட தன்னுடைய விழுந்து போன சுபாவத்தைக் காண்பிக்க, அப்படிப்பட்டவைகளை அவனில் பெற்றிருக்கிறான், தேவன் அவனுக்குக் கொடுத்ததை அவன் சீரழிக்கிறான். முதலாவது காரியமாக, அவனுக்கு தேறுதலைக் கொடுப்பதற்காக பரிசுத்தாவிக்குப் பதிலாக அவன் (மது) புட்டியை அல்லது உலகத்தை எடுத்துக் கொள்கிறான். அவனுடைய ஜீவியத்தின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும்படிக்கு தேவன் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கிறார், அவன் அவளுடன் திருப்தி அடையாமல், மற்றொரு மற்றொருவளை அவன் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது; அது போலவே ஸ்திரீயும் வேறொருவனை பெற்றுக் கொள்கிறாள்; வாலிப ஜனங்களும் மற்றவர்களும் அவ்விதமே செய்கின்றனர். 60. கர்த்தர் நமக்கு அருளியிருக்கிற இந்த எல்லா தேற்றரவாளர்களும் இருந்தும் கூட, பிரயாணத்தின் முடிவை அது அடையும் போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நம்முடைய புருவத்தின் மீது ஒரு தலையணையை நாம் அழுத்தினவர்களாய், மரித்துக் கொண்டு இருப்போம், நம்முடைய மனைவியானவள் தன்னுடைய முகத்தில் கண்ணீர் வடித்தவளாய், தேவனை நோக்கி அவளுடைய கண்களை உயர்த்தினவளாய் நின்று கொண்டிருக்க மாத்திரமே செய்ய முடியும். நம்முடைய நண்பனோ நம் தோளில் தட்டிக் கொடுத்தவனாய், நம்முடைய கரங்களைக் குலுக்கினவனாய், தன்னுடைய கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருக்கக் கூடும், ஏனெனில் அதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அச்சமயத்தில் அந்த தேற்றரவாளன் இருப்பாரானால், தாவீது சொன்னது போல, ‘ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். நீர் என்னோடு கூட இருக்கிறீர். மரண இருளின் பள்ளத்தாக்கிலும்கூட உமது கோலும் உம் தடியும் என்னைத் தேற்றும்’ (என்று கூற இயலும்). 61. மனிதன் ஏன் தாகமுள்ளவனாயும் பசியுள்ளவனாயும் இருக்கிறான்-? ஏனெனில் அவன் உண்டாக்கப்பட்ட போது, அவனைத் தேற்றரவு பண்ணும்படிக்கு தேவன் வாசம் பண்ணும்படியாக அவனுக்குள் ஒரு சிறு இடம் சிருஷ்டிக்கப் பட்டு, அவன் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவன் பாவத்தின் காரணமாக தன்னைத் தான் உதறிக் கொண்டு, தேவனை விட்டு அப்பால் செல்லும் போது, அந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவன் அதற்காக – அதை அடைவதற்காக பசியாயிருக்கிறான். 62. இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மிடமுள்ள பிரச்சனை என்னவெனில், நம்முடைய விழுந்து போன சகோதரன் இடமுள்ள காரியம் என்னவென்று அவனிடம் காட்டுவதற்கு நம்மால் செய்யக் கூடிய எல்லாவற்றையும் நாம் செய்யாமல் இருக்கிறோமா-? என்று நான் அஞ்சுகிறேன். அவனோடுள்ள காரியம் அது தான். வாலிப பருவத்தினர் இடையேயுள்ள குற்றங்களுக்கான காரணம் அதுதான், அதன் காரணமாகத்தான் சபையில் குற்றங்கள் நடக்கின்றன, வீடுகளில் குற்றங்கள் நடக்கின்றன, அதுதான் இளம் பருவத்தினரை குற்றம் புரிய வைக்கிறது. 63. அதன் காரணமாகத்தான் நடத்தை கெட்டவர்களும் (beatniks) மற்றவர்களும் தெருவில் மேலும் கீழுமாக குதித்துக் கொண்டு, இந்த எல்லா காரியங்களையும் அதிகரிக்கச் செய்கின்றனர், ஏனெனில் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காக ஏதோ ஓன்றை கண்டு கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர். 64. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இன்றிரவு நான் இதைச் சொல்லட்டும்: பரிசுத்தாவியின் வல்லமை வருவது போன்று திருப்திபடுத்துவது எதுவுமில்லை. அது உங்களுடைய ஜீவியத்தையும் உங்களுடைய மனப்பான்மையையும் மாற்றி, உங்களுக்குத் தேற்றரவையும், நித்திய ஜீவனையும் கொடுக்கும். இம்மானுவேலின் இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு அங்கு பாவிகள் அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் போது தங்கள் எல்லா பாவக் கறைகளையும் போக்கிக் கொள்கின்றனர் 65. ஒரு மனைவியானவள் தேற்றி முதுகில் தட்டிக் கொடுக்கலாம். ஒரு நண்பன் உட்கார்ந்து நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால் பாவத்தை நீக்குவதற்கான ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அது தான் கர்த்தராகிய இயேசுவின் இரத்தமாகும். என்னுடைய பாவத்தை எதனால் நீக்கக் கூடும்-? இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை; என்னை மீண்டும் சுகப்படுத்த எதனால் கூடும்-? இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை. எழுத்தாளர் கூறுவது போல: ஓ, விலையேறப்பெற்ற நதி அது பனியைப் போன்று என்னை வெண்மையாக்கும்; வேறே நதியை அறியேன், இயேசுவின் இரத்தம் தானே. 66. அது தான் அது. அது சுத்தப்படுத்தி, தூய்மையாக்கி, ஐக்கியத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது, ‘இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்கள் என்னைக் காண்பீர்கள்; உலகத்தின் முடிவுபரியந்தம் நான் (தனிப்பட்ட பிரதிபெயர்) உங்களுடனே, உங்களில் கூட இருக்கிறேன். பரிசுத்த ஆவியாகிய அவர் வந்திருக்கும் போது, அவர் வரும் போது, பிதா என்னுடைய நாமத்தில் தேற்றரவாளனை அனுப்புவார். அவர் வரப்போகிற காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார், காரியங்களை உங்களுக்கு நினைப்பூட்டுவார்.’ எப்போது-? நாம் கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது – பரிசுத்த ஆவியானவர் வார்த்தையின் வழியாக கீழிறங்கி வந்து, தேற்றி, ஆறுதலைக் கொடுக்கிறார். 67. உலகத்தின் அழிவு வருகிறது, இப்பொழுது எல்லா காரியங்களும் படிப்படியாக அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா நம்பிக்கையும் போய் விட்டது, உலகமானது எங்குமே நிலை நிற்க முடியாது. அவர்கள் மது அருந்தி, சீட்டாடி, விவாகம் கொண்டு, விவாகம் பண்ணி கொடுக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பரிசுத்தாவியாகிய, தேற்றரவின் உண்மையான அஸ்திபாரத்தை புறக்கணித்து விட்டார்கள். 68. ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற நாம் வரப் போகிற ஒரு இராஜ்ஜியத்தை எதிர் நோக்கி இருக்கிறோம் (கர்த்தருடைய நாமம் ஆசீர்வதிக்கப் படுவதாக.), அங்கே இனி மேல் வருத்தமில்லை, அழுகையில்லை, இருதய வேதனை இல்லை; ஆனால் சமாதானமும், சந்தோஷமும், அன்பும், அழிவு இல்லாமையும், ஏதோவொரு நாளில் அதன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும். 69. உங்கள் கவலைகளையெல்லாம் தூக்கி எறியுங்கள். உங்களுக்குக் கவலைகள் இருந்தால், அவைகளை அவர் மேல் வைத்து விடுங்கள், அவர் உங்களை விசாரிக்கிறவர். மற்றவை நித்திய மரணத்துக்கு வழி நடத்தும். இதுவோ நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும். மனிதன் அந்த தேற்றரவாளனை வாஞ்சிக்கக்கூடிய விதத்தில் அவன் உண்டாக்கப்பட்டு இருக்கிறான். அவன் ஒரு தேற்றரவை விரும்புகிறான், ஏனெனில் அவன் அவ்விதமாக உண்டாக்கப்பட்டு உள்ளான். அவ்விதமாகத் தான் தேவன் அவனுக்குள் அந்த அறையை கட்டி, அவனோடு ஒன்றாக பொருத்தியுள்ளார்; அவனுடைய ஆத்துமாவையும், மனச்சாட்சியையும், அவனுடைய பார்வைகளையும், அவனுடைய புலன்களையும், ஒவ்வொன்றையும் ஒன்றிணைத்து உருவாக்கி உள்ளார். அவனை சந்தோஷப்படுத்தவும், அவனை ஆறுதல்படுத்தவும், அவனிலிருந்து சோர்வையும் பதட்டத்தையும் எடுத்துப் போடவும் இந்த ஏதோவொரு சிறு அறையில் தேவன் பரிசுத்த ஆவியுடன் உட்கார்ந்து இருக்கிறார். ஓ, என்னவொரு காட்சி-! என்னவொரு சத்தியம்-! 70. இப்பொழுது, சோர்வுற்றிருக்கும் என்னுடைய ஏழ்மையான நண்பனே, நீ அதை அறியாதவனாய் இங்கே இருப்பாயானால், அது சத்தியம் என்பதற்கு நான் ஒரு சாட்சியாய் இருக்கிறேன். நான் பயந்த சுபாவமுள்ள, மனச்சோர்வடைந்த ஒரு நபராக, இரு பக்கமும் ஐரிஸ் குடும்பத்தை சேர்ந்தவனாக இருக்கிறேன், அவர்கள் எளிதில் கோபமடைகிறவர்களாகவும், குடிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். என்னுடைய தாயார் பாதி இந்திய பெண். உண்மையாகவே பிறப்பானது என்னை ஒரு கட்சி மாறுபவனாக ஆக்கி விட்டது. அது சரியே. ஓ, நான் ஏறக்குறைய பாதி மரபு வகையினனான ஒரு பயங்கரமான நபராக இருந்து இருக்கிறேன். ஆனால் என்ன சம்பவித்தது-? எனக்குள் இருந்த அந்த சிறு அறையில் ஏதோ ஓன்று வந்து தங்கி, புரிந்து கொள்ளும் ஆற்றலை அருளும் சமாதானத்தை கொடுத்தது, நான் மரணத்திலிருந்து ஜீவனுக்கும், இருளிலிருந்து வெளிச்சத் திற்கும் வந்திருக்கிறேன். ஓ, என்னால் அதை ஒருபோதும் மறுதலிக்க முடியாது. அது என்னுடைய ஜீவனாக உள்ளது. அவரே எல்லாமுமாய் இருக்கிறார். 71. நான் என்னுடைய 33 வருட ஊழியத்தை நெருங்கிய வேளையில், அதோ அங்கிருக்கிற அந்த மருத்துவமனையில் நான் நின்றிருந்தேன், எந்த வேளையிலும் சாத்தானுக்குக் கொடுப்பதற்கு சமீபமாக அது வந்தது. என்னுடைய சிறிய மகள் ஷாரோன் ரோஸ் மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருந்த போது, நான் அங்கே நின்றிருந்தேன், நான் அறைக்குள் இருந்ததை மருத்துவர் கூட அறிந்து இருக்கவில்லை. 72. நான் உள்ளே செல்ல அவர் அனுமதிக்கவில்லை, ஏனெனில் அவளுக்கு மூளை மற்றும் முதுகுத்தண்டைத் தாக்கும் ஒரு வியாதி இருந்தது. அவர் என்னிடம், ‘பில்லி, நீங்கள் அதை பில்லி ஜூனியரிடம் கொடுத்து விடுவீர்கள். அங்கே உள்ளே போகாதீர்கள்’ என்றார். நான், ‘டாக்.’ என்றேன். 73. அவர் என்னை உட்கார வைத்தார். அவர் நர்ஸிடம், ‘போய் கொஞ்சம் மருந்தை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடு.’ என்றார். 74. ஏறக்குறைய இந்த அளவு உயரமுள்ள ஒரு சிறு கண்ணாடி குவளையுடன் அவள் வந்து, ‘சகோதரன் பிரன்ஹாமே, இதை அருந்துங்கள்.’ என்றாள். 75. நான், ‘அதை சற்று கீழே வைத்துவிடு.’ என்றேன். அவள் அறையை விட்டு வெளியேறுவது வரையில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் முகப்பு கூடத்தின் வழியாக, கீழே கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்றேன். 76. அங்கே என்னுடைய மகள் படுத்திருந்தாள், அவளுடைய கண்களில் ஈக்கள் மொய்த்தவளாய் படுத்திருந்தாள். அவளுடைய முகத்தின் மேல் கொசு வராமல் தடுக்கும் ஒரு சிறு மூடி வைக்கப்பட்டிருந்தது, அவள் மரித்துக் கொண்டிருந்தாள். சவக் கிடங்கில் படுத்திருந்த அந்த சிறுமியின் தாயை நான் கவனித்தேன். அவளுடைய சிறிய சகோதரன் பில்லி, மிக மோசமாக வியாதிப்பட்டு ஒரு மருத்துவமனையில் இருந்தான். என்னுடைய தகப்பனார் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய கரங்களின் மேல் இருந்தவாறு மரித்து இருந்தார். மேலும் என்னுடைய சகோதரன் உடனடியாக கொல்லப்பட்டான்... அங்கே ஒரு வாலிப பிரசங்கியாக நான் இருந்தேன். அவளும் நானும் தான் இருந்தோம், நான் அவளை நோக்கிப் பார்த்து, கவனித்தேன். நான், ‘ஓ, ஷாரோன், தேனே, இதோ அப்பா இருக்கிறேன், என்னை உனக்குத் தெரியுமா-?’ என்றேன். அவளுக்கு என்னைத் தெரியும் என்று நான் அறிவேன். நான் போய் வருகிறேன் என்று என்னிடம் கை அசைப்பது போல் அவள் என்னைப் பார்க்க முயற்சித்தாள். அவளுடைய கண்கள் குறுக்காக நின்றன. அவள் மிகவுமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள், அந்த சிறு நீல நிற கண்கள் குறுக்காக நிற்பதை நான் காண முடிந்தது. 77. அப்போது நான் அவளைக் கவனித்தேன். நான் முழங்கால்படியிட்டு, ‘தேவனே, அவளுடைய தாய் அதோ அங்கே அச்சவக்கிடங்கில் கிடக்கிறாள்; நாங்கள் அவளைக் காலையில் அடக்கம் பண்ணப் போகிறோம். கர்த்தாவே, என்னுடைய குழந்தையை எடுத்துக் கொள்ளாதேயும். நான் அவளை வளர்க்கட்டும். அவள் மிகவும் இனிமையாவள். கர்த்தாவே, அவளை எடுத்துக் கொள்ளாதேயும்’ என்று கூறினேன். சரியாக அப்பொழுதே, கறுத்த துணியைப் போன்ற ஒன்று வந்து, அதனுடைய மடிப்பு அவிழ்க்கப்பட்டு, அப்படியே அவளிடமிருந்து பார்வையை மறைத்துக் கொண்டதாகக் காணப்பட்டது. ‘நீர் எப்படியும் அவளை எடுத்துக் கொள்வீர்.’ நான் எழுந்தேன். 78. அப்போது, சாத்தான் என் பக்கத்தில் வந்து, ‘இதற்குப் பிறகும் நீ அவரை சேவிப்பாயா-? நீ இங்கே ஒரு இளைஞனாக இருக்கிறாய். மேலும் நீ... நீ என்ன செய்துள்ளாய்-? உன்னால் கூடுமான வரை தெரு முனையெங்கும் நின்று, நீ மிகவும் பெலவீனம் அடையும் மட்டும் உபவாசித்தாய், உன்னுடைய வேலையை செய்ய ஒரு தொலைபேசி கம்பத்தில் கூட உன்னால் ஏற முடியவில்லை. பிரசங்கிக்கவும், கதறி ஜெபித்ததையும் தவிர நீ என்ன செய்தாய்-? அவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தை முழு காட்சியையுமே மாற்றி விடும், ஆனால் அவர் அதை செய்வாரா-? இல்லை, அவர் அதை செய்ய மாட்டார். அவர் அவளை மரிக்கும்படி விட்டு விட்டார். அதற்குப் பிறகும் நீ திரும்பிச் சென்று அவரைச் சேவிப்பாயா-? அந்த மணி நேரத்தில், நான் சற்றேறக் குறைய வந்து விட்டேன்... 79. என்னுடைய கால்கள் என்னை இனியும் பற்றிப் பிடித்துக் கொள்ளாத வேளையில், நான் படுக்கையின் மேல் சாய்ந்து, ‘ஷேரி (Sherry), உனக்கு அப்பாவைத் தெரியும்,’ என்றேன். அவள்... அவள் மூச்சுத் திணறினதை போன்று இருந்ததை நான் கேட்டேன், அவள் நோக்கிப் பார்த்தாள். அவள் மரித்துக் கொண்டு இருந்தாள் என்பதை நான் – நான் அறிந்தேன். 80. நான், ‘வெறும் ஒரு வார்த்தை. அவர் பேசக் கூட வேண்டாம்; அவர் அப்படியே பார்த்தாலே போதும்; அவருடைய சொந்த சிந்தையானது அப்படியே காட்சியையே மாற்றிப்போடும், அந்த மூளைக் காய்ச்சல் அவளை விட்டுப் போய் விடும், அவள் சுகமடைவாள். வெறுமனே ஒரு வார்த்தை, ஆனால் அவர் அதை செய்ய மாட்டார்,’ என்று எண்ணினேன். சாத்தான், ‘அதற்குப் பிறகும் நீ அவரை தொடர்ந்து சேவிப்பாயா-?’ என்று கேட்டான். 81. நான், ‘நான் எங்கே போவேன்-? நான் என்ன செய்ய முடியும்-? நான் யாரிடம் போவேன்-? என்னுடைய நம்பிக்கை எங்கே-? எனக்கு ஏதோவொன்று சம்பவித்து விட்டது,’ என்று எண்ணினேன். நான், ‘இங்கே ஒரு சில வருடங்களுக்கு முன்பு, நான் அவரை நேசிக்கிறேன் என்பதை அறிவேன்,’ என்று கூறினேன். 82. நான் படுக்கையின் பக்கத்தில் நடந்து சென்று, அவளுடைய சிறிய தலையில் என்னுடைய கரங்களை வைத்து, ‘டார்லிங், தேவன் உன்னைக் கொடுத்தார், தேவன் உன்னை எடுத்துக் கொண்டார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். நீர் என்னைக் கொன்று போட்டாலும், நான் உம்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்,’ என்றேன். ஆம், ஐயா. 83. நான், ‘டார்லிங், இப்பொழுதிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில், நான் உன்னை எடுத்து, அதோ அங்கேயுள்ள சவத்தைப் புதைப்பவருடைய சவக் கிடங்கில் உள்ள உன்னுடைய தாயின் கரத்தில் உன்னைக் கிடத்துவேன். அவர் என்னைக் கொன்று போட்டாலும், நான் எங்குமே போக முடியாது. நான் எப்போதும் கண்டு கொண்டுள்ள நம்பிக்கை அவர் மாத்திரமே. அவர் மாத்திரமே அஸ்திபாரமாய் இருக்கிறார். நான் எப்போதும் கொண்டிருந்ததிலேயே ஆறுதல் அவர் மாத்திரமே. அவரிடம் அந்த ஆறுதல் இல்லாமலிருந்தால், நான் இப்பொழுது தேறுதலடையும்படி எங்கே போக முடியும்-?’ என்று கூறினேன். 84. நான் அதைச் சொன்ன போது, தூதர்கள் வந்து அவளை பொதிந்து தூரமாகக் கொண்டு சென்றனர். நான் அப்படியே சற்றேறக்குறைய நிலை குலைந்து போனேன், ஆனால் ஏதோ இன்று சம்பவித்தது. அவரே என்னுடைய தேற்றரவாளனாக இருக்கிறார். அவர் என்னிடம் வந்தார். அவர் என்னை விசாரித்தார். 85. நான் மேலே கல்லறைக்கு தினமும் செல்வேன், அங்கே செல்லும்படியான கடமையை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு நாளும் அங்கு சென்று, கொஞ்ச நேரம் அழுது புலம்பி ஜெபிப்பேன். மாநில செனட்டர் என்னுடைய பாப்டிஸ்ட் சபையின் ஒரு அங்கத்தினராக இருந்தார். எனவே அப்போது நான் – நான் மேலே சாலையில் போய்க் கொண்டிருந்தேன், திரு.ஐஸ்லர் சொன்னார் – மேலே வந்து என்னைக் கண்டு நிறுத்தினார்; அவர் ஓடி வந்து தன்னுடைய கரங்களை என்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டார். நான் காலணிகளை அணிந்திருந்தேன், அது சரியாக 1937-ம் வருடத்தில் நடந்த வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு சம்பவித்ததாகும். நான் என்னுடைய கரங்களை பின்னால் வைத்தவாறு மேலே சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திரு.ஐஸ்லர் நின்று என்னை நோக்கி ஓடி வந்தார்; அவர், ‘மகனே, பில்லி, நான் உன்னிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்,’ என்றார். அவர் ஒரு வயதான மனிதர்; அவர் இப்பொழுது தம்முடைய பிந்தைய வருடங்களில் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். நான், ‘திரு. ஐஸ்லர் அவர்களே, அது என்ன-?’ என்றேன். 86. அவர், ‘நீர் பிரசங்கிப்பதை நான் கேட்டிருக்கிறேன். நீர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், நீர் கிறிஸ்துவை எவ்வளவாக மேன்மைபடுத்திப் பேசி, அவரைக் குறித்து இந்த எல்லா காரியங்களையும் எப்படியாய் கூறினீர்கள். உம்முடைய தகப்பனார் உம்முடைய கரத்தில் மரிக்கும்படி அவர் அனுமதித் தாரே, அளவுக்கு அதிகமான மருந்து அவரை கொன்று போட்டதே,’ என்றார். 87. ஒரு மருத்துவர் அவரைக் கொன்று போட்டார். அவர் செய்வது என்னவென்று அறியாமல், பாதி கிரெயின் (grain) அளவு (1-grain என்பது 0.065 கிராம் – மொழி பெயர்ப்பாளர்) நஞ்சை (strychnine) அவருக்குக் கொடுத்தார், அது அவரைக் கொன்று போட்டது. மேலும் நான்... அவர் என்னுடைய முகத்தைப் பார்த்தவாறு என்னுடைய கரங்களில் மரித்துப் போனார். 88. அதற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, ஒரு அன்புக்குரிய கிறிஸ்தவளான என்னுடைய சகோதரனுடைய மனைவியாகிய என் மைத்துனி (sister-in-law) மரித்துப் போனாள். அவள் எழுவதைக் கண்டேன், மேலும் அந்த மரத்தில் ராபின் பறவை உட்கார்ந்து கொண்டு, ‘நதிக்கு அப்பால் ஒரு தேசமுண்டு’ என்று பாடுவதைக் கவனித்தேன். 89. அங்கே என்னுடைய மனைவி மரித்தாள். நான் அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டு, ‘பில், நீர் அதைக் குறித்து பேசியிருக்கிறீர்; நீர் அதைக் குறித்து பிரசங்கித்து இருக்கிறீர்; ஆனால் இந்த ஜீவியத்தில் இருந்து வேறொன்றுக்கு போவதென்பது எவ்வளவு மகிமையானது என்று உமக்குத் தெரியாது,’ என்று கூறிக் கொண்டிருந்தாள். இந்த எல்லாக் காரியங்களும் அங்கே இருக்கின்றன, அவர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்... 90. ஓ, அவர், ‘இப்பொழுது, நீர் பெற்றிருந்த ஒவ்வொன்றையும் அவர் எடுத்துக் கொண்டார், இப்பொழுதும் அவர் உமக்கு என்னவாக இருக்கிறார்,’ என்றார். 91. நான், ‘நீர் என்னுடைய சகல ஆறுதலின் ஊற்றாக இருக்கிறீர், என் ஜீவனைப் பார்க்கிலும் மேலானவராக இருக்கிறீர்; பூமியில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு-? அல்லது பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு-?’ என்றேன். ஓ. அவர், ‘அது உமக்கு முக்கியமானதாக உள்ளதா-?’ என்றார். நான், ‘அது தான் எனக்கு முக்கியமானது,’ என்றேன். 92. அவளை அடக்கம் பண்ணியுள்ள அந்த மலைப்பக்கத்துக்கு நான் மேலே சென்றேன். நான் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்தேன், ஒரு வயதான புறா அங்கு வந்து, பாடுவது அல்லது கூவுவது போல் தோன்றியது, சாயங்காலம் கழிந்து போகிற சமயத்தில் நான் அங்கே உட்கார்ந்து, அவளை நினைத்துக் கொண்டு இருந்தேன், குழந்தையும் அவளுடைய கரத்தின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. பைன் மரங்களினூடாக தென்றல் காற்று வீசி, இவ்வாறு பாடுவதைப் போன்று காணப்பட்டது: நதிக்கு அப்பால் ஓர் தேசமுண்டு, அது எப்போதும் இனிமையானது என்கின்றனர் விசுவாசத்தினால் மாத்திரமே அதன் கரைகளை நாம் சென்றடைய முடியும். அங்கேயுள்ள அழிவில்லாதவரோடு நாம் வாழ்ந்திட நாம் ஒருவர் ஒருவராய் அந்நுழைவாயிலில் நாம் போய்ச் சேர்வோம். என்றாவது ஒரு நாள் உனக்காகவும் எனக்காகவும் அவர்கள் அந்த பொன் மணியோசையை தொனிப்பர். 93. என்னுடைய மனைவி மரித்த போது, கடைசி காரியங்களை அவளிடம் கூறி, அவளை முத்தமிட்டு, வழியனுப்பி வைத்தேன்... அவள், ‘பில்லி, நீங்கள் தனியாக வாழவேண்டாம். என்னுடைய பிள்ளைகளை வளர்க்கும்படியாக தேவ ஆவியால் நிறைந்த ஏதோ ஒரு நல்ல பெண்ணை பெற்றுக் கொள்ளுங்கள்,’ என்றாள். அடுத்த நாள் குழந்தை மரிக்கப் போகிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவள், ‘அந்தக் காலை வேளையில் நான் உம்மை சந்திப்பேன்,’ என்றாள். அவள் சொன்னாள்... 94. நான், ‘அந்த வாசலின் கிழக்குப் பக்கத்தில் நின்று கொள். நீ ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், அந்த இராஜ்ஜியத்தின் புத்திரர்களும் உள்ளே வருவதைக் காணும் போது, உன்னால் முடிந்த வரை சத்தமாக, ‘பில்-! பில்-!’ என்று உரத்த சத்தமாய் கூப்பிடத் தொடங்கு. நான் பிள்ளைகளை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு அங்கே உன்னைச் சந்திப்பேன்,’ என்றேன். அது தான் அவளுடன் நான் இருந்த கடைசி தேதி அகும். தேவனுடைய ஒத்தாசையினால், நான் இன்னும் என்னுடைய கவலைகளை எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் தேற்றரவினாலே அவரிடம் வைத்து விட்டேன், நான் ஏதோவொரு நாளில் அங்கே அவளைச் சந்திக்கும் போது, நான் அந்த தேதியை உண்மையாகச் செய்வேன். 95. தேவனுடைய கிருபையால், நான் யுத்தக் களத்தில் தரித்திருந்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக என்னுடைய வாழ்நாள் முழுவதும் செலவழிந்து போவது வரையில் பிரசங்கிப்பேன். 96. ஓ, உங்கள் கவலைகளை அவர் மேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களை விசாரிக்கிறவர். இப்பொழுது, அவர் உங்களை விசாரிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். அவர் நம்மை விசாரிப்பவரானால், ஒரு சில நிமிடங்கள் நாம் அழைப்போம். சரி. 97. அவர் இங்கே பூமியில் இருந்த போது, அந்த குஷ்டரோகியை விசாரித்தார். குஷ்டரோகி அங்கே உட்கார்ந்திருந்தான். நீங்கள் எப்பொழுதாவது ஒரு குஷ்ட ரோகியை கண்டது உண்டா-? ஓ, நான் அவர்கள் அநேகரை கண்டிருக்கிறேன். என்னுடைய கரங்களால் அவர்களைக் கட்டித் தழுவியிருக்கிறேன், அவர்கள் குஷ்டரோகத்தின் காரணமாக வெள்ளையாக இருந்தனர். உள்ளேயிருந்து வெளியே தெரியும் ஒரு விதையில் தோன்றும் புடைப்பு (seed wart) போன்று காணப்பட்டிருக்கும். 98. யாருமே அவனைத் தொடக் கூடாதவனாய் தெருவின் சேற்றிலும், அழுக்கிலும், குப்பையிலும் உட்கார்ந்திருந்தான், எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்க முடியுமோ அவ்வளவு தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொருவரும் அவனைச் சுற்றி வரவே பயப்பட்டனர். அவன் ஒரு... அவன் ஒரு நாதியற்றவனாக இருந்தான். பட்டணத்தின் சமூகத்தினின்றும், சபை சமூகத்தினின்றும், பட்டணத்திலிருந்த ஒவ்வொன்றினுடைய சமூகத்தினின்றும் தள்ளப்பட்டவனாக இருந்தான். 99. அவனுடன் எதையுமே செய்ய யாருமே விரும்பவில்லை. அவர்கள் எதையாவது செய்த போது, அவன் ஒரு ரொட்டித் துண்டை அந்தக் குப்பையில் இருந்து பெற்றுக் கொள்ளும்படி, அதை அவனிடம் எறிவார்கள். அவர்கள் அவனுடைய அருகில் போகவே மாட்டார்கள். 100. ஆனால் இயேசு அவனுக்காக கவலை கொண்டிருந்தார். அவர் அவனிடம் நடந்து சென்று உட்கார்ந்தார். அவருடைய கரங்களை அவன் மேல் போட்டுக் கொண்டு, ‘எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு’ என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. ஓ, அவர் அவனை விசாரித்தார். அவனுக்காக கவலைப்பட யாருமே இல்லாத போது, அவர் கவலைப்பட்டார். 101. உங்களை விசாரிக்க யாருமே இல்லாதிருக்கும் போதும், அவர் இன்னும் விசாரிக்கிறார். 102. அங்கே குருடான நிலையிலிருந்த ஒரு வயதான பிச்சைக்காரன் இருந்தான், அவனுடைய சட்டைக் கை முழுவதும் கிழிந்த நிலையிலும், அவனுடைய முகம் முழுவதும் மீசை வளர்ந்தும், சாப்பிட எதுவும் இல்லாமலும், வாசலின் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு நாள் பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். தேவ குமாரன் தம்மேல் உலகத்தின் பாவங்களுடன் சிலுவையில் அறையப்படு வதற்காக கல்வாரியை நோக்கிய தம்முடைய பாதையில் இருந்தார்; ஆனால் ஒருவன், ‘தாவீதின் குமாரனே, என் மேல் இரக்கமாயிரும்’ என்று திடீரென்று கூச்சலிட்டான். 103. வல்லமையுள்ள ஒரு மனிதனோ – ஒரு மனிதனோ, ஒரு ஜனாதிபதியோ, மேயரோ, மாநில கவர்னரோ, காவல்துறையிலுள்ள ஒருவரோ அதைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தைத் தடுத்து நிறுத்துவார்களா-? எப்போதாவது நீங்கள் அதைக் கண்டு கொள்ளலாம். 104. ஆனால் இயேசு அக்கறை கொண்டார். அவன் தன்னுடைய கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்து விட்டான், அவர் விசாரித்தார். அவர் அவனை நோக்கி, ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்-?’ என்று கேட்டார். ‘கர்த்தாவே, நான் பார்வையைடைய வேண்டும்,’ என்றான். அவர், ‘உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது,’ என்றார். அவர் அவனை விசாரித்தார். 105. ஒரு சமயம் அங்கே ஒரு நடத்தை கெட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் ஒரு மட்டுமீறிய குடிகாரியைப் போன்றோ அல்லது ஒரு விபச்சாரியைப் போன்று இருந்தாள். பட்டணத்தின் ஸ்திரீகள் அவளைத் தொடக் கூடாத அளவுக்கு மிகவும் ஒழுக்கங் கெட்டவளாக இருந்தாள். அவள் சமூகத்தால் தள்ளப் பட்டவளாக இருந்தாள். அவள் தண்ணீர் எடுக்க வந்தாள்; மதிய நேரம் வரும் வரை அவள் காத்திருக்க வேண்டிய் இருந்தது. ஒழுக்கமான பெண்களுடன் அவளால் வர முடியவில்லை. அந்த ஸ்திரீயுடன் எதையும் செய்ய யாருமே இல்லை. அவளுக்கு விவாகமாகி இருந்தது, அவளுக்கு அநேக புருஷர்கள் இருந்தார்கள். அப்படி இருந்தும் பொதுச் சட்ட திட்டத்தின்படி வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளை விசாரிக்க யாருமேயில்லை. அவர்கள் மிகவும் விறைப்பானவர்களாகவும், ஆசாரிய நுணுக்கம் பார்க்கிறவர்களாகவும் இருந்தனர். விசாரிக்க யாருமே இல்லை. 106. ஆனால் அவர் அவளுக்காக அதிகமாக கவலை கொண்டார், அவளுடைய இருதயத்தின் இரகசியங்களை அவளிடம் கூறி, ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, ஏதோவொன்றை அவளில் வைத்தார், அவள் பட்டணத்துக்குள் ஓடி, ‘நான் செய்த காரியங்களை எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள்,’ என்று கூறினாள். 107. பாருங்கள், அது தான் அவரை எனக்கு மகத்தானவராக ஆக்குகிறது. அவர் ஒரு திணித்து வைக்கப்பட்ட சட்டையாக இருக்கவில்லை. அவர் ஜனங்களுக்கு தேவனுடைய கிருபையாக இருந்தார். அவர் மனித மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய அன்பாக இருந்தார். எவ்வளவு சிறியதாகவோ அல்லது முக்கிய மற்றதாகவோ இருந்தாலும் காரியமில்லை, அவர் விசாரித்தார்; ஒழுக்கம் கெட்ட தன்மை, குடிப்பழக்கம் உள்ளவர்கள், குடிக்கு அடிமையானவர்கள், அது என்னவாக இருந்தாலும். 108. நான் சிகாகோவிலுள்ள ரோஸல்லா கிரிஃபித்தைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் (அவளுடைய புத்தகமானது இப்பொழுது வெளி வந்துள்ளது), மகத்தான ஆல்கஹாலிக் அனானிமஸ் சங்கத்தாரும் (Alcoholics Anonymous) அவளைக் கைவிட்டு இருந்தனர். (இந்த சங்கத்தார் மருந்துகளின் மூலமாக ஜனங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டுமென்று அப்படிப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் கிளை சென்னையிலும் கூட உள்ளது – மொழி-பெர்ப்பாளர்.) அவள் அந்த அளவு மிக மோசமான நிலையில் கூட்டத்துக்கு வந்திருந்தாள். சிகாகோவிலுள்ள ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு பிரபலமான மருத்துவமனைகள் அவளுடைய பெயரை புத்தகத்தை விட்டு நீக்கி, ‘வர வேண்டாம்,’ என்று கூறியிருந்தன. அவளுடைய தாயார் அவளுக்குக் கொடுத்திருந்த ஒரு கோட் மாத்திரமே அவளிடம் மீதியாக இருந்தது, இப்படிப் பட்ட ஒரு மிகவும் கீழான நிலையில் இருந்தாள்; அவளுடைய மது பாட்டில்களை வைப்பதற்காக அந்த கோட்டை அவள் உள்ளாக வெட்டி இருந்தாள், அப்படிப்பட்ட ஒரு குடிகாரியாக அவள் இருந்தாள். அவள் மரணத்துக்கு பயப்படாமல், இரவு நேரத்தில் சாக்கடைகளில் படுத்திருப்பாள். அவள் புத்திசாலித்தனமான, கல்வியறிவு பெற்ற, பரிதாபமான அருவருப்பான கிழவி போன்ற தோற்றம் கொண்டவளான ஒரு வாலிப பெண்ணாக இருந்த அவள் (கூட்டத்திற்கு வந்து) பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாங்கள் அதோ அங்கே மேலே இந்தியானாவில் ஒரு கூட்டத்தைக் கொண்டு இருந்தோம், அவளுக்காக அக்கறை கொள்ள யாருமில்லை. அவள் யாரென்பதை அவர்கள் அறிவார்களானால், அவர்கள் அவளை விட்டு விலகி பின்னால் சென்று விடுவர். 109. ஆனால் இயேசு அக்கறை கொண்டார். அவர் என்னைச் சுற்றி அசைவாடி, ‘அதோ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்ணின் பெயர் ரோஸல்லா கிரிஃபித் என்பதாகும். அவள் ஒரு குடிகாரி. குடிப்பழக்கத்தை மாற்றும் சங்கங்களினால் அவள் கைவிடப்பட்டு இருக்கிறாள், அவர்களால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை. எனவே எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. ஆனால் அவள் அவர், மேல் விசுவாசம் கொண்டிருக்கிறாள்: கர்த்தர் உரைக்கிறதாவது, இந்த மணி நேர முதற்கொண்டு இனி மேல் அவள் குடிகாரியல்ல,’ என்றார். இப்பொழுது அவள் ஒரு இனிமையான, அன்பார்ந்த ஒரு கிறிஸ்தவளாக இருக்கிறாள். அநேக இடங்களிலும், இரவு கேளிக்கை விடுதிகளிலும், சிறைச்சாலைகளிலும் குடிகாரர்களை இரட்சிக்கும்படி அவள் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறாள். 110. இயேசு அக்கறை கொள்கிறார், எனவே அப்படியே உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். உங்களுடைய துக்கங்களில், அவர் விசாரிக்கிறார். நீங்கள் உங்கள் அன்பார்ந்தவர்களை இழக்கும் போது, அவர் கவலை கொள்கிறார்; கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்காக அவர் அக்கறை கொள்கிறார். 111. ஒரு நாள் அவர் மிகவும் களைப்படைந்தவராய் தம்முடைய வழியில் இருந்தார், அவருக்கு பிரயாணம் செய்வதே கடினமாய் இருந்தது, ஆனால் பட்டணத்தில் இருந்து ஒரு- ஒரு கூட்டம் ஜனங்கள் அடக்க ஊர்வலமாக வந்தனர், ஒரு தாயார் பெரும் துக்கம் கொண்டவளாய் தன்னுடைய கரங்களை மேலும் கீழும் அடித்துக் கொண்டு, ‘ஓ, யேகோவாவே, நீர் ஏன் அவனை எடுத்துக் கொண்டீர்-? அவன் என்னுடைய ஒரே மகன்,’ என்று (கதறினாள்) 112. அவர் களைப்படைந்தவராயும் சோர்வடைந்தவராயும் இருந்தார், ஆனால் அவர் இருதயம் நொறுங்குண்ட, அந்த ஏழை ஸ்திரீயின் மேல் அக்கறை கொண்டார். தூக்கிக் கொண்டு செல்பவர்களிடம் – சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு செல்பவர்களிடம் நடந்து சென்று, அதைத் தொட்டு, ‘மகனே, எழுந்திரு’ என்றார். ஏன்-? அவர் விசாரிக்கிறார். அவர் புரிந்து கொள்கிறார். இப்பொழுது, அவருடைய ஜீவியத்தின் மூலமாக அவர் விசாரிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். 113. இப்பொழுது, நமக்கு இன்றிரவுள்ள கேள்வி என்னவெனில் நீங்கள் கவலைப் படுகிறீர்களா-? அவர் விசாரிக்கிறாரே. ஆனால் இப்பொழுது நீங்கள் கவலை கொள்கிறீர்களா-? உங்களுக்கு அக்கறை இல்லையெனில், அவரால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆனால் நீங்கள் போதுமான அக்கறை கொண்டு இருந்தால், அல்லது உங்களைப் பற்றி போதுமான அக்கறை கொண்டிருந்தால்... ஜனங்கள், ‘எனக்கு என்ன சம்பவிக்கும் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை,’ என்ற பயித்தியக்கார வாசகத்தை கூறுவதை நான் கேட்டு இருக்கிறேன். ஓ, என்னே. எனக்கு என்ன சம்பவிக்கும் என்று நான் நிச்சயமாகவே அக்கறை கொண்டு உள்ளேன். நிச்சயமாக, நான் அவ்வாறு செய்கின்றேன். நான் கவலைப்படுகிறேன். சரியான மனநிலையிலுள்ள எந்த நபரும் அக்கறை கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என்று நான் அறிய விரும்புகிறேன். அவர் என்னை நேசித்தார் என்பதை நான் அறிந்து கொள்வேனானால், வேறு யாரும் அதைப் போன்று நேசிக்க முடியாது. அவர் உங்களை விசாரிக்கிறார். அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார். நீங்கள் எவ்வளவு சிறியவர்கள் என்றோ, நீங்கள் எவ்வளவு அற்பமானவர்கள் என்றோ, எவ்வளவு ஏழையாயிருக்கிறீர்கள் என்றோ, எவ்வளவு மெத்தனம் உள்ளவர்கள் என்றோ, நீங்கள் எத்தனை தடவைகள் முயற்சி செய்து தோல்வியடைந்தவர்கள் என்றோ காரியமில்லை, அவர் இன்னும் விசாரிக்கிறார். அவருடைய நேசமானது இன்னும் உங்களுடைய இருதயத்தின் கதவில் தட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அதற்காக நன்றி இல்லாதவர்களாக இருக்கிறோமா-? இங்கே ஒருநாள்... 114. நான் சற்று முன்பு உங்களிடம் கூறியிருக்கிறேன். அது உங்களுடைய தலைக்கு மேலாக போகவில்லை என்று நம்புகிறேன். அது வெறுமனே எளிதாக எடுத்துக் கொள்ளும் விதத்தில் கடந்து செல்லவில்லை என்றும், ஆனால் இந்த வார்த்தைகளை - ஒவ்வொன்றும் முடிவில் உள்ளது என்பதை நீங்கள் ஞாபகம் கொண்டுள்ளீர்கள் என்றும் நம்புகிறேன். நாகரீகம் முடிவில் உள்ளது. ஜனநாயக ஆட்சி முடிவில் உள்ளது. ஒவ்வொன்றும்... இந்த தேசமானது எந்த நேரமும் சுக்கு நூறாகி பாழாய்ப் போகும்படியான தேன்கூடு போல உள்ளது. ஓ, மற்ற தேசங்களும், இந்த உலகமும் முடிவில் உள்ளது. சாவுக்குரிய ஒவ்வொன்றும் மரித்து, அழிவு இல்லாமையானது அதனுடைய இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடும். நாம் இந்த இடத்திற்கு வர வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் இங்கே இருக்கிறோம். நாம் முடிவில் இருக்கிறோம். வேறு எந்த அஸ்திபாரமும் இல்லை; உங்களால் முடிந்தது வேறு எதுவுமில்லை... இயேசுவைத் தவிர விசாரிக்கக் கூடியவர் வேறு யாருமில்லை, அவர் விசாரிக்கிறார். 115. அவருக்கு உங்களுடைய ஜீவியத்தை ஒப்புக் கொடுப்பதற்கோ, அவரை நேசிப்பதற்கோ, வீதிகளில் செல்வதற்கோ, உங்களுடைய முதலாளியிடம் செல்வதற்கோ, உங்களுடைய அண்டை வீட்டாரிடம் செல்வதற்கோ, ஒரு இனிமையான சாந்தமான ஆவியோடு எங்கிலும் செல்வதற்கோ போதுமான அக்கறை கொள்ளாமல் இருக்கிறீர்களா-? உலகத்தின் காரியங்களில் இருந்து உங்களை நீங்களே பிரித்துக் கொண்டு, மற்றவர்கள் உங்களில் இயேசுவைக் காணும்படியாக, ஒரு சமாதானமான, இனிமையான, அப்படிப்பட்ட ஜீவியம் செய்திடுங்கள். நீங்கள் அவருக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் என்று நீங்கள் உணரவில்லையா-? நன்றி கெட்டவர்களாக இல்லாது இருப்போம். 116. இங்கே இருக்கும் ஜனங்களாகிய நீங்கள்... சென்ற சாயங்கால வேளையில் நான் வெளியே போன போது, ஒரு ஸ்திரீ வாசலண்டை நின்று கொண்டு இருந்தாள்; அவள் இன்றிரவு இங்கு இருக்கிறாள் என்று நம்புகிறேன். நான் அதன் ஊடாக சென்ற போது, அவள் ஒரு சிறு குழந்தையுடன் அங்கே நின்று கொண்டு இருந்தாள். அது அழுது கொண்டு இருந்திருக்க வேண்டும். அவள் ஒரு கிறிஸ்தவள் அல்ல. ஆனால் அந்தச் செய்தியானது இடையே குறுக்கிடுவதற்கு அவள் விரும்பவில்லை, எனவே அவள் தன்னுடைய குழந்தையை எடுத்துக் கொண்டு அதனுடன் அவள் வெளியே நழுவிச் சென்றாள். நான் வாசலண்டை போகிற போது, அவள், ‘ஓ, அந்த செய்தியின் கடைசி பாகத்தை கேட்பதை நான் எவ்வளவாக நேசித்தேன்’ என்றாள். மேலும் நான்... 117. ஏதோவொன்று அப்படியே என்னிடம், ‘இது அதிர்ஷ்டவசமானது அல்ல. இது தேவனுடையதாக இருக்கிறது,’ என்று கூறினது. 118. நான், ‘சீமாட்டியே, நீ ஒரு கிறிஸ்தவளா-?’ என்று கேட்டேன். 119. அவள், ‘இல்லை, ஐயா. நான் எப்பொழுதாவது ஒரு சமயம் அவ்விதம் இருப்பேன் என்று நம்புகிறேன்,’ என்றாள். தன்னுடைய கரத்தில் ஒரு சிறிய குழந்தையைக் கொண்டுள்ள அழகான தோற்றமுடைய தாயார்... 120. நான், ‘அவர் இங்கே இருக்கிறார். அதை அதிக காலத்திற்கு தள்ளிப் போட வேண்டாம்,’ என்றேன். நாங்கள் அங்கே எங்களுடைய தலைகளை ஒன்றாக தாழ்த்தி, ஜெபித்தோம். அவளுடைய ஆத்துமாவை ஏற்றுக் கொள்ளுமாறு தேவனிடம் கேட்டுக் கொண்டேன். 121. முடிவில், நான் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, அவள், ‘ஆமென்,’ என்றாள். அவளுடைய கண்களில் இருந்து வடியும் கண்ணீரை அவள் துடைக்கத் தொடங்கினாள். 122. ஏன்-? அவள் காண்பித்தாள். அவள் அந்தச் செய்தியை வாஞ்சித்த போது, அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், அதைப் பெற்றுக் கொள்ள இங்கே யாரோ ஒருவரை அவள் கொண்டிருக்கலாம். வேறு யாரோ ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள அவள் விரும்பினாள். அதைச் செய்தது என்ன-? தேவன் விசாரித்தார். எனவே சரியாக அங்கே நின்று கொண்டிருந்த அவளை அவர் கொண்டிருந்தார், சரியாக அதைப் பெற்றுக் கொள்ளும் இடமாக அது இருந்தது, அது தான் அது. அவர் விசாரிக்கிறார். காரியங்களை எவ்விதம் சரியாக செய்வது என்று அவர் அறிவார். நாம் போதுமான நன்றி உணர்வுடன் இருக்கிறோமா-? 123. எனக்கு அருகிலுள்ள ஒரு பட்டணத்தில் சம்பவித்த ஏதோ ஓன்றைக் குறித்த ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு தாயார் தன்னுடைய மகளை கல்லூரிக்கு அனுப்பி இருந்தாள். அவளுடைய பெயர் மேரி. எனவே அவள் வீட்டை விட்டு போகும் போது ஒரு அருமையான பெண்ணாக இருந்தாள். அவள்... அவளுடைய தாயார் துணி துவைக்கும் பலகையிலும் மற்றவைகளிலும் துணிகளைத் துவைத்து, அவள் கல்லூரிக்குச் செல்லும்படிக்கு பணம் செலுத்தினாள். ஒரு நாள் அவள் வீட்டைக் காணச் சென்றாள். அவள் பல திரப்பட்ட ஜனங்களுடன் (பழகி) குழம்பிப் போயிருந்தாள். அவள் மிகவும் உலகப் பிரகாரமான தேவனற்ற அவிசுவாசியான ஒரு சிறு பெண்ணோடு அவள் ஐக்கியமாயிருந்தாள். 124. நீங்கள் (அப்படிப்பட்டவர்களுடன்) போகும் போது அது மோசமானதாக உள்ளது. அதைப் போன்ற, அப்படிப்பட்டவர்கள் இடமிருந்து பிரித்துக் கொள்ளுதல். உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களை நீங்களே பிரித்துக் கொள்ளுங்கள். வெளியே வாருங்கள். நீங்கள் சிறந்தவர்களாக இருந்து, சிறந்தவர்களாக இருப்பதைப் போன்று நடிக்க வேண்டாம். ஆனால் உங்களுடைய வஸ்திரங்களை பாவத்தோடு கெடுத்துக் கொள்ள வேண்டாம், ‘மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு உடன்படாதே.’ ஜனங்களுக்கு உற்சாகம் ஊட்டும் ஒரு வார்த்தையைப் பேசும்படி நீங்கள் விரும்பினால், சரிதான், ஆனால் அந்த பன்றியோடு சேற்றில் புரள வேண்டாம். நீங்கள் அதிலிருந்து விலகி இருங்கள். அது சரியே. 125. அவள் இந்த சிறு பெண்ணோடு அந்த சாக்கடைக்குள் போகத் தொடங்கினாள். பிறகு அவள் வீட்டிற்கு வந்த போது, இரயில் வண்டி முன்னால் நின்றது. அந்தப் பெண் ஜன்னலின் பக்கத்தில் உட்கார்ந்து, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். 126. அங்கே வெளியே ஒரு வயதான பெண் தன்னுடைய முகம் முழுவதும் தழும்புகளோடு, தன்னுடைய கழுத்து உள்ளே வளைந்திருந்து, அவளுடைய சிறிய கரங்கள் இதைப் போன்று எலும்பும் தோலுமாக இருந்து, அவளுடைய இருதயத்தில் உள்ள எல்லாவற்றோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் இரயில் வண்டியிலிருந்து வெளியே வரும் யாரோ ஒருவருக்காக காத்து இருந்தாள். 127. மேலும் இந்தச் சிறு பெண் மேரியோடு இருந்தாள்; அவள், ‘மேரி, அருவருப்பான கிழவி போன்ற தோற்றமுடைய அந்த வயதான பெண்ணைப் பார். அது பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதல்லவா-?’ என்றாள். அது மேரியின் தாயாக இருந்தது. 128. மேரி தன்னுடைய சிநேகிதியின் உணர்ச்சியின் காரணமாக, அவள், ‘ஆம், அவள் மிகவும் பயங்கரமாகத் தோற்றமளிக்கிறாள்,’ என்றாள். அவர்கள் இரயிலை விட்டு இறங்கின போது, மேரி அந்நிலையிலேயே இருந்தாள். 129. அவளுடைய தாயார் ஓடி வந்து, ‘ஓ, டார்லிங், நான் உன்னைக் கண்டதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என்றாள். மேரியோ, தன்னுடைய முதுகைத் தன் தாயாரிடமிருந்து திருப்பிக் கொண்டாள். 130. அவள், ‘எனக்கு உன்னைத் தெரியாது,’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினாள். 131. அங்கே ஒரு நடத்துநர் நின்றிருக்க நேர்ந்தது, அவர் இந்தப் பெட்டியில் தாவிக் குதித்து ஏறி, அவர், ‘ஒரு நிமிடம் பொறுங்கள்,’ என்றார். சுற்றியுள்ள எல்லோருடைய கவனத்தையும் அவர் ஈர்த்தார். அவர், ‘கொஞ்சமும் சந்தோஷம் இல்லாத பிள்ளையே, உன்னிடம் உள்ள இந்த பெரும் கோபத்தின் காரணமாக உன்னுடைய சொந்த தாய்க்கு உன் முதுகைத் திருப்ப உன்னால் எப்படி முடிந்தது-? உனக்கு வெட்கமில்லையா, மேரி-?’ என்று சொன்னார். 132. அவர், ‘அந்தக் காரியத்தை நான் அறியும்படி நேர்ந்தது. வாலிபப் பெண்ணே, இங்கே கவனி’ என்று அதைக் குறித்து பேசியிருந்த அந்த மற்ற பெண்ணிடம் கூறினார். அவர், ‘அது அவளுடைய தாய். அவளுடைய தாயாரைப் போல பாதி அளவுக்கு கூட அழகாக இருந்த நாளை மேரி ஒரு போதும் கண்டிருக்கவே மாட்டாள். அவளுடைய தாயார் வாலிப பெண்ணாக இருக்கும் போது, அவளை எனக்குத் தெரியும். அவளுக்கு சந்தோஷமான முறையில் விவாகமாகியது. அவளுக்கு இந்த சிறு குழந்தை இருந்தது, அவள் தான் மேரி. அவள் மேல் மாடியில் இருந்தாள். அவளுக்குத் திறந்திருந்த ஜன்னல்கள் இருந்தது, அவ்வாறு இருந்தால் தான் தென்றல் காற்று... அங்கே மேலே அந்த சிறு தொட்டில் இருந்தது. அவள் கீழ் மாடத்திற்கு வந்து, அவள் துணிகளைத் துவைத்து, கொல்லைப் புறத்தில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். மேலும் வீடு தீப்பிடித்துக் கொண்டது. அவள் அதை அறியும் முன்பே வீடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது, அண்டை வீட்டார் ஓடி வந்தார்கள். மேரியின் தாயார் சுற்றி வந்து, ‘என் குழந்தை-! என் குழந்தை, அது மேல்மாடியில் உள்ளது-!’ என்று அவள் சொன்னாள். தீயணைப்பு வீரர், ‘வீடு கட்டுக்குள் இல்லை. இப்பொழுது அதனிடம் செல்ல எந்த வழியும் இல்லை,’ என்றார், ஆனால் அவள் என்ன செய்தாள்-? அவள் தன்னுடைய சிறு மேலாடையை அவளை விட்டு எடுத்து, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள், அது துணி துவைத்த தண்ணீரின் காரணமாக ஈரமாயிருந்தது, அதை அவளுடைய முகத்தைச் சுற்றி போர்த்துக் கொண்டு, அந்த நெருப்பினூடாக ஓடிச் சென்றாள். தீயணைப்பு வீரர்கள் அவளைத் தடை செய்ய முயற்சித்தனர். அவள் மிக விரைவாக மேல் மாடியில் ஓடிச் சென்றாள். ஏன்-? அவளுடைய அன்பார்ந்த குழந்தை அங்கே படுத்திருந்தது. அவள் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு, ‘அந்த ஈரமான மேலாடை என்னைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் இப்பொழுது குழந்தையை திரும்பவும் அதனூடாக எடுத்துக் கொண்டு போவேனானால், அந்த தீப்பிழம்பின் காரணமாக அது துண்டு துண்டுகளாக ஆகி விடும்,’ என்று நினைத்து, அவள் தன்னுடைய சொந்த ஈரமான மேலாடையை கொண்டு அந்த குழந்தையைப் பொதிந்து கொண்டு, தன்னுடைய மார்போடு அணைத்துக் கொண்டு, தீப்பிழம்பினூடாக ஓடி வந்தாள். அந்த நெருப்பு பிழம்புகள் அவளுடைய முகத்தின் தசையை எரித்துப் போட்டது,’ என்றார். 133. ‘அதன் காரணமாகத்தான் அவள் அசிங்கமான தோற்றத்துடன் இருக்கிறாள். அவள் விகாரமான தோற்றமுடனும், நீயோ அழகான தோற்றமுடனும் காணப்படுகிறாய். அப்படிப்பட்ட ஒரு தியாகத்தை செய்த உன்னுடைய தாயாருக்கு உன் முதுகை காட்ட வேண்டுமென்று நீ விரும்புவாயா-?’ என்றார். அவள் அவமானத்தால் தலை குனிந்தாள். 134. அவ்விதமாகத்தான் நாமும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் கொண்டு இருக்கின்ற இந்த சுவிசேஷத்தைக் குறித்தும், இந்த தேற்றரவாளனைக் குறித்தும், இந்த உலகமானது மத வெறி என்று அழைத்து, ஜனங்கள் பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்க விரும்புகிற இந்த பரிசுத்த ஆவியை குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா-? 135. நாம் இந்தத் தேறுதலை கொண்டிருக்கும் படியாக, அதோ அங்கே சிலுவையில் இயேசு செய்த பலியைக் குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா-? நீங்கள் உலகத்தின் தேற்றரவுக்காவும், சில அண்டை வீட்டாரின் பிரபலத்திற் காகவும் அதை மாற்றுவீர்களா-? தேவனும் மறுதலிப்பார். நாம் நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்து விடுவோம், அவர் நம்மை விசாரிக்கிறவர். நாம் அவர் மேல் அன்பு வைத்து, நம்மிலுள்ள எல்லாவற்றோடும் அவரை மனதார நேசிப்போமாக. 136. மேலும், ஓ, சீஷர்கள் அவருடைய நாமத்துக்காக தாங்கள் நிந்தைபடும்படிக்கு பாத்திரராக எண்ணப்பட்டபடியால், களிகூர்ந்தபடியே திரும்பிப் போனார்கள் என்றபடியே நானும் இன்றிரவு உணருகிறேன். எனக்குக் கவலையில்லை; நான் சிந்தை குழப்பமடைந்தவன் என்று நீங்கள் சொல்லக் கூடும்; நீங்கள் என்னை பரிசுத்த உருளையன் என்று அழைக்கக்கூடும். நான் சிந்தை குழப்பமடைந்தவன் என்றோ அல்லது நான் ஒரு பரிசுத்த உருளையனாக போய் விட்டேன் என்றோ என்னுடைய பாப்டிஸ்ட் சபையானது என்னிடம் கூறினது. 137. என்னுடைய தகப்பனாரும் தாயாரும் தங்களுடைய வீட்டை விட்டு என்னைத் துரத்தி விட்டனர், என்னுடைய கரத்தில் காகிதத்தால் செய்யப்பட்ட சாக்குப்பையும், அதில் சில துணிமணிகளுமே தவிர வேறெதுவுமில்லை; நான் வைத்திருந்த எல்லாமே, ஒரு சிறு சட்டையும், ஒரு மாற்று உள்ளாடையும், ஒரு ஜோடி காலுறையும் தான். என்னுடைய சொந்த ஜனங்களே, ‘நீ அந்த காரியத்தை இங்கே எங்களுடைய மீதியுள்ள பிள்ளைகளிடம் கொண்டு வரக்கூடாது,’ என்றனர். எங்கு போகிறோம் என்று அறியாமலே நான் நியூ ஆல்பெனிக்குச் சென்றேன், தலை சாய்க்க இடமேயில்லை. 138. ஆனால், சகோதரனே... என்னுடைய குழந்தை மரித்துக் கொண்டு இருக்கும் அந்த மணி நேரத்தில் சாத்தான், என்னிடம் வந்தான். நான் அநேக தடவைகள் வந்திருக்கிறேன், ஆனால் இரட்சிப்பு எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். என்னால் அதை மறுதலிக்க முடியவில்லை. அது என்னைக் கொன்று போட்டாலும், என்னால் அதை மறுதலிக்க முடியாது. தேவனுடைய கிருபையால் நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து வந்திருக்கிறேன். என்னுடைய கவலைகள் எல்லாம் அவர் மேல் வைக்கப்பட்டு உள்ளன, அவர் என்னை விசாரிக்கிறார். அவர் உங்களையும் விசாரிக்கிறார். 139. இப்பொழுது நாம் சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். நீங்கள் உங்களுடைய கவலைகளை எல்லாம் அவர் மேல் ஒரு போதும் வைத்து இருக்கவில்லையோ என்று வியப்படைகிறேன்; நீங்கள் கொஞ்சத்தை அவர் மேல் வைத்திருக்கலாம், ஆனால் அந்த எல்லை கோட்டு விசுவாசியைப் போலவும், எபிரெயர் 10-ல் உள்ளதைப் போலவும் அவைகள் எல்லாவற்றையும் வைத்துவிட நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்கள். எபிரெயர் 6-வது அதிகாரத்தில் அது சொல்லப்பட்டுள்ளது, அது இவ்வாறு கூறுகிறது: ...தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து... ...தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்றெ எண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன்... 140. எபிரெயர் 10 இவ்வாறு கூறுகிறது: சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களின் நிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்கும் என்று நாம் அறிவோம். அங்கே இரக்கமானது இருக்கும் போது, நீரூற்றில் இரக்கம் இருக்கும் நேரத்தில், நீரூற்றில் தருணம் இருக்கும் போது... 141. நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில், நான் அந்த வேத வாக்கியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். ‘ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், ஒருபோதும் முழு அறிவுக்கு வரக்கூடாதவர்கள்...’ என்ற அந்த வேத வாக்கியம் எதைக் குறிக்கிறது-? எல்லைக்கோட்டு விசுவாசியைப் போல, ஆதியாகமம் 14–ல் இருப்பது போன்று அல்லது... யாத்திராகமத்தில், இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் வரை வந்த போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அதே திராட்சப்பழங்களை ருசி பார்த்தனர்; ஆனால் கோழைத்தனத்துடன் திரும்பி வந்து, பயந்து, ‘நம்மால் போக முடியாது; எதிர்ப்பு மிகவும் பெரிதாக உள்ளது,’ என்றனர், எல்லைக்கோட்டு விசுவாசிகள், சபைக்கு வந்து, ஓ, அது அற்புதமாயிருக்கிறது என்று சொல்லும் ஜனங்கள், ஆனால் அதில் தங்களுடைய கரத்தை ஒரு போதும் வைக்க மாட்டார்கள், அவர்கள் பீடத்தின் மேல் விழ ஒரு போதும் விரும்ப மாட்டார்கள், அவர்கள், ‘தேவனே, உம்முடைய ஆவியால் என்னை நிரப்பும், நான் உம்முடைய பிள்ளைகளில் ஒருவனாக ஆகட்டும்,’ என்று ஒருபோதும் கூறமாட்டார்கள். எல்லைக்கோடு, நாம் அதை விரும்புவதில்லை. 142. நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்போம். இந்தச் சபையானது தீப்பொறியாய் இருக்கட்டும், ஜெபக்கூட்டங்கள் எல்லா நேரமும் நடத்தப்படட்டும், கூட்டங்கள் பட்டணத்தினூடாகவும் ஒவ்வொரு இடத்திலும் நடத்தப்படட்டும்; வேலை செய்பவர்கள், (பிறர் தங்களைக் குறித்து) சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக எல்லா நேரமும் மனப்பூர்வமாய் வேலை செய்யட்டும். இங்கே பிரதிநிதித்துவப்படுத்துகிற வேறு சபைகளின் அங்கத்தினர்களாயிருந்து தங்களுடைய சபைகளுக்குத் திரும்பிப் போகிறவர்கள் அந்த அனுபவத்துடன் போகட்டும். நம்முடைய கவலைகளை அவர் மேல் வைப்போம், அவர் உங்களை விசாரிக்கிறவர். அவர் தேற்றரவாளனாக இருக்கிறார். 143. இன்றிரவு உங்களுக்கு அந்த சமாதானம் இல்லையென்று தேவனுக்கு முன்பாக நேர்மையாக அறிக்கை செய்யும் அப்படிப்பட்ட ஒரு நபர் இங்கு இருந்தால், நீங்கள் உங்களுடைய கவலை ஒவ்வொன்றையும் அவர் மேல் வைக்க முடியும், ஆனால் நீங்கள் அதை விரும்புகிறீர்கள்; நீங்கள் அதை முயற்சி செய்து, அதில் தடுமாற்றம் அடைந்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உண்மை யாகவே முழுவதுமாக உங்களை நீங்களே அவருக்கு ஒப்புக் கொடுக்கும் படியான ஒரு நிலைக்கு ஒரு போதும் வந்திருக்கவில்லை, நீங்கள் அதைச் செய்ய விரும்பினீர்கள், நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாம், நான் என்னுடைய கரங்களை உயர்த்துகையில், என்னை ஜெபத்தில் நினைவுகூருங்கள்,’ என்று கூறுவீர்களா-? நீங்கள் இப்பொழுது உங்களுடைய கரங்களை உயர்த்தி, ‘சகோதரன் பிரன்ஹாமே, என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள்,’ என்று சற்று கூறுவீர்களா-? சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை, உன்னை, இங்கிருக்கும் உன்னையும் ஆசீர்வதிப்பாராக. ஆம். பின்னால், அங்கே பின்னால், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய கரங்கள் மேலே உயருவதை அவர் காண்கிறார். சீமாட்டியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரியாக இங்கே முன்னாலிருக்கும் சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னாலிருக்கும் என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களை விசாரிக்கிறார். நாம் வழக்கமாக ஒரு சிறு பாடலை பாடுவது உண்டு: அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார், அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார்; சூரிய வெளிச்சத்திலும் நிழலிலும், அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார். 144. உங்களுக்கு ஞாபகமிருக்கும், இங்கே அரிசோனாவுக்கு வந்த என்னுடைய முதலாவது பிரயாணத்தில் நீங்கள், ‘போய் வாரும்,’ என்று என்னிடம் நீங்கள் அந்தப் பாடலைப் பாடினீர்கள், அந்த பாடலைப் பாடினது இங்கே வெளியே சகோதரன் கார்சி-யாவுடைய சபையிலுள்ள ஒரு சிறு ஸ்பானிய பாடகர் குழு ஆகும்; நாம் அதோ அங்கே கலிபோர்னியாவில் ஒன்றாகக் கூடின போது, நான் அந்த வரிசையில் நடந்த சமயத்தில், அழுது, ஒருவருக்கொருவர் கை அசைத்தீர்கள். அநேகர் தகப்பன்மாரும் தாய்மாருமாக இருக்கின்றனர், அவர்களில் அநேகர் இன்றிரவு அதோ அங்கேயுள்ள திரை வழியாக கடந்து சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர் இன்னும் உங்களுக்காக கவலை கொள்கிறார். அவர் விசாரிப்பார். விசாரிக்க வேறு யாரும் இல்லாத போது, அவர் விசாரிப்பார். இப்பொழுது நீங்கள் அவரை நேசியுங்கள், மேலும் நீங்கள் விரும்புகிறீர்கள்... அவர் உங்களை விசாரிக்க நீங்கள் விரும்புகிறீர்கள், அவருக்காக அக்கறை கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் கரத்தை உயர்த்தி, ‘சகோ.பிரன்ஹாமே, என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள், எனக்கு இன்றிரவு ஒரு தேவை உள்ளது, நான் பீடத்தின் மேல் வைக்க இயலவில்லை. இல்லாவிடில்...’ என்று கூறுங்கள். 145. அதை கர்த்தர் மேல் வைத்து, அப்படியே நடந்து சென்று, ‘கர்த்தாவே, நான் – நான் ஒரு புகைபிடிப்பவன்,’ என்று கூறுங்கள். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ‘நான் ஒரு குடிவெறியன். நான் – நான் ஒரு பொய்யன். நகைச்சுவைகளைக் கூறுவதை என்னால் விட முடியவில்லை, அசுத்தமான நகைச்சுவைகளைக் கூறிக் கொண்டிருக்கிறேன், அதை விட முடியவில்லை. என்னால் குடியையும், ஒரு தோழமை குடியையும் விட முடியவில்லை, நான் ஒரு கூட்டத்துடன் சேர்ந்திருக்கிறேன். நான் – நான் விரும்புகிறேன் – நான் அவை எல்லாவற்றையும் விட்டு வெளிவர விரும்புகிறேன். நான் – நான் – நான் எப்போதும் பாவமான காரியங்களை நோக்கிப் பார்க்கிற ஒரு நபராக இருக்கிறேன், வீதிகள் முழுவதும் அசுத்தமான ஸ்திரீகளாலும் மனிதர்களாலும் நிரம்பி உள்ளது. மேலும் – மேலும் அது – அது – நான் – நான் விரும்புகிறேன் – நான் அதிலிருந்து வெளிவர விரும்புகிறேன். ஓ, தேவனே, நீர் அதைச் செய்வீரா-? இன்றிரவு நான் என்னுடைய எல்லா கவலைகளையும் உம் மேல் வைக்கக் கூடியதாக இருக்கட்டும்.’ 146. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, ‘சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் இப்பொழுது இங்கே ஒவ்வொன்றையும் ஒப்புக்கொடுத்து, பீடத்தின் மேல் அதை வைக்கிறேன், நான் என்னுடைய கவலைகளையெல்லாம் அவர் மேல் வைப்பேன்-?’ என்று கூறுவீர்களா-? நாம் ஜெபிப்பதற்கு முன்பாக வேறொருவர் உண்டா-? 147. தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியவாறு, இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த வாலிபரை தேவன் ஆசீர்வதிப்பாராக, அந்த வாலிபர் சிவப்பு நிற கம்பளிச் சட்டையை அணிந்துள்ளார். ‘ஒரு சிறு பிள்ளை அவைகளை நடத்துவான்.’ உண்மையாகவே வேதவாக்கியங்கள் சரியாயுள்ளன. 148. உங்களுடைய கரத்தை அப்படியே உயர்த்தி, ‘எனக்காக ஜெபியுங்கள்,’ என்று கூறுகிற வேறொருவர் எங்காகிலும் உண்டா-? இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்பானிய வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும்-? அங்கே இருக்கும் சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். அங்கே இருக்கும் ஐயா, நான் உம்முடையவைகளைக் காண்கிறேன். அங்கே பின்னாலுள்ள ஸ்பானிய வாலிபன். இந்த சீமாட்டி இங்கே உட்கார்ந்து இருக்கிறாள். நான் காண்கிறேன். தேவன் உன்னுடைய கரத்தை காண்கிறார்; அவர் உன்னுடைய உணர்ச்சிவசப்பட்ட நிலையை அறிந்திருக்கிறார். சகோதரியே, (தேவன்) உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது, வேறு யாராகிலும், ‘சகோதரன் பிரன்ஹாமே, என்னை நினைவுகூருங்கள்’ என்று கூறுவீர்களா-? அங்கே பின்னாலுள்ள சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மேலும் இங்கே உட்கார்ந்திருக்கும் சிறு பெண்ணான உன்னையும். அங்கே பின்னால், நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன், தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தி உள்ள அந்த பெரிய பலமான மனிதன். இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தன்னுடைய தலையைத் தாழ்த்தியவாறு இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர், ஜீவியத்தில் ஈடுபட தயாராயிருக்கும் மனிதர். 149. ஓ, என்னவொரு நேரம், ‘நான் என்னுடைய கவலைகளையெல்லாம் அவர் மேல் வைக்கக் கூடுமா-?’ என்று தீர்மானங்கள் செய்யப்படுகின்றன. அது விநோதமானதாகக் காணப்படலாம். தேவன் இந்த வயதான ஜோடியை ஆசீர்வதிப்பாராக. (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசி.) ‘இங்கே, என்னுடைய கவலைகளை அவர் மேல் வைத்து விட விரும்புகிறேன்.’ ஆம், அப்படியே ஒவ்வொன்றையும் ஒப்புக்கொடுக்கிறேன். நான்... (ஒலி நாடாவில் காலியிடம் – ஆசி.) ‘இங்கே என்னுடைய கவலைகளையெல்லாம் உம் மேல் (வைத்து) விடுகிறேன். நான் விசுவாசிக்கிறேன்.’ அங்கே பின்னாலிருக்கும் ஸ்பானிய வாலிபப் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அந்த வாலிபனையும், அந்த வாலிபப் பெண்ணையும். ஆம், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. இப்பொழுது, நம்முடைய ஜெபத்திற்கு முன்பாக வேறொருவர் உண்டா-? ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடைய... யைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். 150. இந்தச் சிறு பையன் ஆசீர்வதிக்கப்படுவானாக. இங்கேயுள்ள இந்த வாலிப பெண் ஆசீர்வதிக்கப்படுவாளாக. ஓ. நீங்கள் ஜெபத்தில் இருக்கையில், நான் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். ஒரு மகிழ்ச்சியூட்டுகிற பார்வை... அங்கே ஒரு நாளைய தினம் இருக்குமானால், சுமார் 4 வயதுள்ள ஒரு ஊழியக்காரர் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். 151. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், பகுத்தறிதலின் ஆவி - நான் கடந்த இரவிலோ அல்லது கடந்த இரண்டு இரவுகளிலோ இங்கே சபையில் அதைக் கொடுக்கவில்லை. நான் முதலாவதாக வேறு ஏதோவொன்றைப் பெற விரும்புகிறேன். வருடங்களுக்கு முன்னால் சுகம் பெற்றதைக் குறித்து, மற்றும் இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் தங்களுடைய இருதயத்தில் சாட்சிகளைக் கொண்டுள்ள ஜனங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் (நான் அதை அறிவேன்.) ஆனால் நான் முதலாவதாக முதன்மையான காரியத்தை வைக்க விரும்புகிறேன். 152. நம்முடைய ஆத்துமாக்கள் அதையே பெற்றுக் கொண்டு, நாம் அப்படியே தேவன் மேல் நம்பிக்கை வைத்து, ‘கர்த்தராகிய தேவனே, நான் இங்கே இருக்கிறேன்,’ என்று சொல்லி, ஒவ்வொன்றையும் பலி பீடத்தின் மேல் கிடத்துவோம். ஆனால் உம் இரத்தமானது எனக்காக சிந்தப்பட்டது, நான் உம்மிடம் வரும்படி நீர் அழைக்கிறீர், ஓ, தேவனுடைய ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன்-! நான் வருகிறேன்-! (சகோதரன் பிரன்ஹாம், ‘நான் இருக்கிறபடியே’ என்ற பாடலை தாழ்ந்த குரலில் பாடத் தொடங்குகிறார் – ஆசி.) 153. அநேகர் தங்களுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்கிறார்களோ என இப்பொழுது நான் வியப்படைகிறேன்... ஒரு சபையைக் குறித்து ஏதோ ஓன்று உள்ளது, அது இனிமையாய் உள்ளது. அங்கே தான் காலங் காலமாக ஜெபிக்கும்படி பரிசுத்தவான்கள் ஒன்று கூடுகின்றனர், அங்கே தான் ஊழியம் ஆனது மேடையில் இருந்து பிரசங்கிக்கப்படுகிறது. ஒரு சபையைக் குறித்து இனிமையான காரியம் ஏதோ ஓன்றுள்ளது. உலகத்தில் இன்று ஜனத்தொகை மிகவும் அதிகமாயுள்ளது, ஒரு சபையில் கூட்டத்தை நடத்துவது என்பது ஒரு வகையாக கடினமானதாக உள்ளது, ஜனங்களே முட்டுக்கட்டையாய் எழும்புகின்றனர். 154. என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரனே, சகோதரியே, ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன்னால், ஊழியத்தை ஆரம்பித்த ஒரு வாலிபனாய் நான் உங்களிடம் வந்தேன். உங்களில் அநேகர் இன்னமும் இங்கே இருக்கிறீர்கள். திருமதி. வால்டிராப் இங்கே இருப்பதை நான் காண்கிறேன், அவள் இருதயத்தில் ஏற்பட்ட புற்று நோயின் காரணமாக அவள் மரித்துப் போகும் தருவாயில் ஒரு தூக்குப்படுக்கையின் மேல் வைத்து தூக்கிக் கொண்டு வரப்பட்டாள்; அது அநேக வருடங்களுக்கு முன்பு நடந்தது. பரிசுத்த ஆவியானவர் அவளுக்கு மீண்டும் ஜீவனைக் கொடுத்தார். அவளுடைய மருத்துவர்கள் சாட்சி கொடுத்தனர், அதைக் குறித்த பதிவு சான்று அவர்களிடம் இருந்தது. இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் மற்றவர்கள்... நண்பர்களே, அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை அது நிரூபிக்கிறது. 155. இப்பொழுது இன்றிரவில் நீங்கள் இங்கே மேலே வருவீர்களா-? உங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ள நீங்கள் கர்த்தரிடம் வைப்பதற்காக நீங்கள் வாஞ்சிக்கிற ஏதோவொரு காரியம் உங்களிடம் உள்ளது, அது உங்களுடைய கவலை, நீங்கள் இங்கே வந்து, நான் உங்களோடு ஜெபிக்கும்படியாக அனுமதிப்பீர்களா-? வாருங்கள், எழுந்து நில்லுங்கள். கிறிஸ்துவை உங்களுடைய இரட்சகராக அறியாதிருக்கிற நீங்கள் அல்லது நீங்கள் அவரை அறிந்திருந்தும், நீங்கள் விட முடியாத சில பழக்கவழக்கங்கள் அல்லது ஏதோவொன்றைக் கொண்டு இருந்தால், நீங்கள் இங்கே வருவீர்களா-? இப்பொழுது வெட்கப்பட வேண்டாம். நீங்கள், ‘சகோ.பிரன்ஹாமே, நான் என்னுடைய கரத்தை உயர்த்தி னேன்’ என்று கூறுங்கள். அப்படியானால் நீங்கள் நிச்சயமாக இங்கே மேலே நடந்து வந்து, ‘எனக்கு கிறிஸ்து தேவை என்று நான் வெளியரங்கமாக அறிக்கை பண்ணுகிறேன். நான் இங்கே வந்து நிற்க விரும்புகிறேன்,’ என்று கூறுங்கள். 156. அவர், ‘நீங்கள் மனுஷருக்கு முன்பாக என்னைக் குறித்து வெட்கப்பட்டால், என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் உங்களைக் குறித்து வெட்கப் படுவேன். ஆனால் நீங்கள் மனுஷருக்கு முன்பாக என்னை அறிக்கை பண்ணினால், நானும் என் பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அவனை அறிக்கை பண்ணுவேன்,’ என்று கூறினார். 157. இப்பொழுது நீங்கள் கீழே பாதையில் நடந்து வருவீர்களா-? இங்கே கீழே வந்து நில்லுங்கள். 158. ஒரு வாலிப ஸ்திரீ வந்து கொண்டிருக்கிறாள், ஒரு வேளை... சீன பெண்மணி தனக்கு கிறிஸ்து தேவை என்று தன்னுடைய வெளியரங்கமான அறிக்கையை செய்வதற்காக இப்பொழுது வந்து கொண்டிருக்கிறாள் என்று ஊகிக்கிறேன். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரியாக அங்கே, நான் சிறிது நேரத்தில் உங்களுடன் இருப்பேன். 159. இப்பொழுது, நாங்கள் பாடும் போது, இன்னும் யாராவது வருவீர்களா-? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. மென்மையும் இரக்கமுமான... 160. இப்பொழுது, உங்களுடைய கவலைகளை அவர் மேல் வைக்க விரும்பினால், வந்து, இங்கே உங்களையே அவருடைய பீடத்தின் மேல் வையுங்கள்... உன்னை அழைக்கிறார்... 161. சற்று உயர்த்துங்கள்; இங்கே கீழே வாருங்கள். நாங்கள் இங்கே நின்று சற்று உங்கள் மேல் கரங்களை வைத்து, உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறோம். அவர் காத்துக்கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கையில், அந்த வாசலைப் பாருங்கள், கவனித்துக் கொண்டிருக்கிறார்... 162. அவர் எதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்-? நீங்கள் உண்மையாகவே அதை விரும்புகிறீர்களா இல்லையா என்பதைக் காணும்படியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுதே வாருங்கள், வாருங்கள். நீங்கள் அதை விரும்பினீர்களா-? நிச்சயமாக, நீங்கள் அதை விரும்பினீர்கள். வீட்டிற்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள்... (தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கேயுள்ள வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) சோர்ந்து போயிருப்பவர்களே, வீட்டிற்கு வாருங்கள்; அக்கறையுள்ள, (தேவன்.) இரக்கமுள்ள இயேசு... 163. இன்றிரவு நீங்கள் விடமுடியாத ஒரு கவலை உங்களுக்கு உண்டா-? நீங்கள் அதை கர்த்தர் மேல் வைக்க விரும்புகிறீர்களா-? கீழே வாருங்கள். ஓ, பாவியே, வீட்டிற்கு வா-! வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள், சோர்ந்து போயிருப்பவர்களே, வீட்டிற்கு வாருங்கள்; 164. (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை விட்டு விலகி, மேடையில் ஜனங்களுடன் ஜெபிக்கிறார்; வேறொரு சகோதரன், ‘மென்மையும் இரக்கமுமான’ என்ற பாடலைத் தொடர்ந்து பாடியவாறு, மற்றவர்கள் வரும்படி துரிதப்படுத்துகிறார்- ஆசி.) நாங்கள்... 165. சுற்றிலுமிருப்பவர்களே, நீங்கள் இப்பொழுது வந்து, ஜெபத்திற்காக சுற்றிலும் முழங்கால்படியிட மாட்டீர்களா-? திருப்தியடையாதவர்களாகிய நீங்கள் - நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து நீங்கள் வர மாட்டீர்களா-? வாருங்கள். உனக்காகவும் எனக்காகவும்... வீட்டிற்கு வாருங்கள், (வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) ... வீட்டிற்கு, சோர்ந்து போயிருப்பவர்களே, வீட்டிற்கு வாருங்கள்; 166. (சகோதரன் பிரன்ஹாம் மீண்டும் பிரசங்க பீடத்தை விட்டு விலகி, மேடையில் ஜனங்களுடன் ஜெபிக்கிறார், அந்த சகோதரனும், ‘மென்மையும் இரக்கமுமான’ என்ற பாடலைத் தொடர்ந்து கூட்டத்தினருடன் பாடிக்கொண்டு, அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் – ஆசி.) வீட்டிற்கு வாருங்கள்... 167. பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்காமலும், தேவனுடைய ஆவியால் ஒரு போதும் நிரப்பப்படாமலும் இருக்கிற யாராவது இங்கு உண்டா-? உங்களுடைய நிலைப்பாடில் நிச்சயமில்லாதவர்களாக இருக்கிறீர்களா-? உங்களுடைய கரத்தை உயர்த்தி, ‘சகோ.பிரன்ஹாமே, நான் பரிசுத்தாவியைக் பெற்றுக் கொள்ளவில்லை,’ என்று கூறுங்கள். நீங்கள் விசுவாசித்த முதற்கொண்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-? நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டு இருக்கவில்லை எனில், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் வந்து, இப்பொழுது இங்கே முழங்கால் படியிட்டு, பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும்படி நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கும்படி விரும்புகிறீர்களா-? நாங்கள் பாடும் போது, இப்பொழுதே வாருங்கள். வீட்டிற்கு வாருங்கள், வீட்டிற்கு வாருங்கள், சோர்ந்து போயிருப்பவர்களே, வீட்டிற்கு வாருங்கள்; அக்கறையுள்ள, இரக்கமுள்ள இயேசு அழைத்துக் கொண்டிருக்கிறார், அழைத்துக் கொண்டிருக்கிறார், ஓ பாவியே, வீட்டிற்கு வா-! இயேசு... நாம் ஏன் தாமதிக்க வேண்டும், 168. இயேசு அழைத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இப்பொழுதே சுற்றிலும் இருந்து வர மாட்டீர்களா-? இது உங்களுடைய கடைசி அழைப்பாக இருக்கலாம். நமக்குத் தெரியாது. அது அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அது இனியும் அவ்வாறிருக்கலாம். நீங்கள் வர மாட்டீர்களா-? அதற்காக (வேறு) ஒரு தருணத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நிச்சயமில்லை எனில், இப்பொழுதே வாருங்கள். நீங்கள் வருவீர்களா-? ... அவருடைய இரக்கத்தைப் பொருட்படுத்தாமல், காலம் தாழ்த்துகிறீர்கள், உனக்காகவும் எனக்காகவும் உள்ள இரக்கத்தை-? வீட்டிற்கு வாருங்கள், (சகோதரனே, சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக) ...வீட்டிற்கு, சோர்ந்து போயிருப்பவர்களே... (சகோதரன் பிரன்ஹாம் ஒரு சகோதரனோடு பேசி விட்டு பிரசங்க பீடத்தை விட்டு செல்கிறார் – ஆசி.) நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ...-?...